இதன் பொருள். கேட்பீராக; இவள் தன்னுடனே பொருந்தி விளையாடும் ஒள்ளிய நுதலினையுடைய ஆயத்தார் எல்லாரும் 1ஓராங்குக்கூடி விளையாடும் அளவிலும் முட்போலக் கூரிய தன் பல்லினுனி தோன்றாமல் முறுவலித்தலைக் கொண்டு, அதனை உள்ளடக்கி, அந்நகுதற்குறிப்புப் பிறரறியாமல் தன்கண்ணாலும் முகத்தாலும் நகுபவள்; இப்பொழுது பெண்டன்மையின்றிப் பிறர் கேளாமல் 2மொழியும் (1) மெல்லியமொழியினை எல்லாருங்கேட்கும்படி கூறி, நிரைத்த வெள்ளிய பல்லின் மேலெயிறு தோன்றப் பெருகச் சிரித்து, சிரித்த அப்பொழுதே பூ (2) வெடித்த தன்மையை ஒத்த புகழ்ச்சி அமைந்த அழகினையுடைய கண்கள் அழகினையுடைய இமை நீர்மல்கும்படி அழாநிற்கும்; இவள் இங்ஙனம் அழுமாறு காமவின்பத்தை ஊழானது ஒருவர் மனம் ஒருவரிடத்தே புரிதலுண்ட கூட்டத்திற் புல்லுதனிறையாத அளவிலே இருவரில் ஒருவரை 3அரியராம்படி பண்ணி நீக்குகையினாலே இந்நிலையாமையை ஆராய்ந்து பார்ப்பாரிடத்து அஃதறுதியாக நரம்பை வீக்குதலைச் செய்ய அதனிடத்தே நின்ற பண்ணினுட் டோன்றிய இனிமையைக் கேட்போர் செவிகொண்டு இன்புறுவதற்கு முன்னே விருப்பம் நின்ற இனிமையாகியபொருள் கெடமுறுக்குஅறும் (3) நரம்பிலுங்காட்டிற் 4பயனின்றாயிருந்தது; ஒஒ! இக் 5கனங்குழையது அல்லலையுடைய குணத்தை நம்மை வருத்தும் என்று பாராதே நம் நெஞ்சழியும்படியாக வந்து குறுகினேம்; குறுகிய யாம் இதனை முடிவுபோகக் காண்பேம் என்று கருதிவந்து எல்லீரும் என்ன காரியஞ் செய்தீர்? இங்ஙனம் வந்த நீர்தாம் என்னை 6இகழ்கின்றீரோ? இகழ்கின்றீராயின், யானுற்ற வருத்தத்தினை எனக்குறுத்தினவனுடைய மாயத்தைச் செய்த மலர்ந்த மார்பை யான்முயங்கி அவனைக் கூடப்பெறினும் அஃ 7திகழ்ச்சியன்றாம்; இங்ஙனம் என்னைச் சிதைத்தலைச் செய்தான் இவனென்று யான் முற்கூறியதனைக் 8கேட்ட நீர் பின்னை அவனாலுற்றதுதான் எத்தன்மைத்தோ என்று
1. தண்மை, மென்மை யென்னும் பொருளில் வருதல், ‘‘தண் குரவை’’ புறம். 24 : 6. என்பதனுரையாலும் வலியுறும். 2. (அ) ‘‘அந்திவெடி முல்லை யரும்பெடுத்துநான்வந்தேன்’’ தனிப்பாடல். (ஆ) ‘‘சூடா ததுமணம் வீசா ததுசுரும் பும்விரும்பி, மூடா ததுவெடியாதது பின்முகி ழாததுதான், வாடாத தோரலர் வந்தாலெவ் வாறுய்வன் மன்னுயிரே’’ மாறன். 249. 3. ‘‘வீழுநர்க் கிறைச்சியாய் விரல்கவர் பிசைக்குங்கோ, லேழுந்தம் பயன்கெட விடைநின்ற நரம்பறூஉம், யாழினுந் நிலையில்லாப் பொருளையு நச்சுவோ’’கலி. 8 : 9 - 11. (பிரதிபேதம்)1ஒருங்குகூடி, 2மொழியுமென் மொழியினை, 3அரியாராம்படி, 4பயனிலையாயிருந்தது, 5கனங்குழைகல்லலை, 6இகழ்கின்றீரோ இகழ்கின்றீரோ இகழ்கின்றீராயின், 7இகழ்ச்சியென்றோமிங்ஙனம், 8கேட்டோ நீ பின்னை.
|