கேட்பீராயின், யானுற்றதிதுவென (1) 1எழுவகையாகிய அறத்தொடு நிலைகளின் ஒன்றை நும்மனத்திற்குப் பொருந்தக் 2கூறும் என்னறிவு என் உள்ளத்துண்டாயின் யான் இங்ஙனம் வருந்துவனோ? வருந்தேன்; அவ்வறிவு கெட்டமையால் யானுற்ற வருத்தம் இத்துணைய வருத்தமென யான் உமக்குக் கூறுவன், அதனைக் கூறக்கேண்மின்; சான்றீர்! என்று சான்றோரை நோக்கிக் கூறுகின்றாள்; என்னுடைய 3சிற்றிலுளுள்ளே (2) கூடலிழைத்து
1. எழுவகை அறத்தொடு நிலை இவையென்பதை, தொல். பொருளி. 13-ஆம் சூத்திரத்தால் உணர்க. 2. கூடலிழைத்து அவனைக் கூடுவேனோ என்று ஆராய்தல்-பெரிதாக ஒரு வட்டங்கீறி அதற்குள்ளே சிறு சுழிகளைக் கணக்கிடாது சுற்றுஞ்சுழித்து அவற்றை இவ்விரண்டு சுழியாகக் கூட்டி இறுதியில் ஒன்று எஞ்சாது கூடுகின்றனவா என்று பார்த்தல். அச்சுழிகளுள் ஒன்று எஞ்சாது கூடுமாயின் தலைவன் விரைவில் வந்து கூடுவனென்றும், ஒன்று எஞ்சிக் கூடாதாயின் அவன் விரைவில் வந்து கூடானென்றும் கோடல் மரபு; தலைவன் வரவை அறிதற்கு அவனைப் பிரிந்த தலைவி இதனைச் செய்வதாகக் கூறல் பண்டைவழக்கென்பர் (அ) நாய்ச்சியார்திருமொழியின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்து அரும்பதத்தில், ‘கூடலாவது-வட்டமாகக் கோட்டைக்கீறி அதுக்குள்ளே சுழிசுழியாகச் சுற்றுஞ்சுழித்து இவ்விரண்டு சுழியாகக் கூட்டினால் இரட்டைப்பட்டால் கூடுகை, ஒற்றைப்பட்டால் கூடாமை என்று சங்கேதம்’ என்றுள்ள செய்தி இங்கே அறியத்தக்கது. (ஆ) இவ்வாறன்றிக் கண்ணை மூடிக்கொண்டு நிலத்தில் வட்டமாக ஒரு கோட்டைக்கீறிப் பின்பு கண்திறந்து பார்த்து அக்கோடு தொடங்கிய இடத்தில் தவறாமல் வந்து சேர்ந்திருப்பின் தலைவனும் தவறாமல் வந்து சேருவானென்றும் அது வந்து சேராமல் விலகி யிருப்பின் தலைவனும் வந்து சேராது விலகியிருப்பானென்றும் கொள்ளுதல் மரபென்பாரும் உளர். இக்கூடலிழைத்தலைப்பற்றிய செய்திகளாகச் செய்யுட்களில் (இ) ‘‘தாழ்கடற் றண்சேர்ப்பன் றாரகல நல்குமே, லாழியாற் காணாமோ யாம்’’ ஐந் - ஐம். 43. (ஈ) ‘‘பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள், கூடலாக்கிடுங் குன்றி மணற்கொடு, கோடல் பூத்தலர் கோழம்பத் துண்மகிழ்ந், தாடுங் கூத்தனுக் கன்பு பட்டாளன்றே’’ (உ) ‘‘மாட நீண்மருகற் பெருமான்வரிற், கூடுநீயென்று கூடலிழைக்குமே’’ தேவாரம். திருநா. கோழம்பம். 4, மருகல். அ; (ஊ) ‘‘இழைப்பன் றிருக்கூடல் கூட’’ நாலா. நான்முகன். 39. (எ) ‘‘சிதைக்கின்ற தாழியென் றாழி திருத்தித்தன் சீறடியா, லுதைக் கின்ற நாயகர் தன்னொடு’’ நாலா. திருவிருத்தம். 34. (பிரதிபேதம்)1எழுவகையவாகிய, 2கூறுமறிவு என்னுள்ளத், 3சிற்றிலுள்ளே.
|