பக்கம் எண் :

890கலித்தொகை

னிடத்தின் முழுதுங் கூடாத இளம்பிறையைக் கண்டேன்; கண்டு அஃது அவ்விசும்பிடத்தே பின்பு நிறைமதியாய் வருத்துமெனக் கருதி யானுடுத்த துகிற்றலையாலே மூடி அகப்படுத்திக்கொள்கின்ற யான் அதனை அகப்படுத்தினால் நீலமணிபோலுந் திருமிடற்றையுடைய மாட்சிமையுடைத்தாகிய மலரையுடைய கொன்றைமாலையை யுடையவன் அதனோடு சூடுதற்குக் காணானாய்த் தேடித் திரியுமோவென்று கொண்டு, 1நெஞ்சே! இது பின் வருத்துதலைத் தேராதே இதனை அவற்குக் கொடுத்து ஒருபடிப்பட உபகாரியாவாய்; யாம் தெள்ளியேங்காணென்று கூறி நெஞ்சை வலியுறுத்தி அதனைக் கைவிட்டு, பின்னரும் அவர் வருவாரோ? வந்தால் யான் உடம்படாது அவரை மிகவும் இகழ்ந்திருப்பேனோ? என்று உள்ளி வளைந்திருந்த நள்ளிருளையுடைய (1) ஊர்காவலர் காத்தலைக் கொண்ட கங்குலிடத்துக் கனவிலே யான் உள்ளியவாறே வந்து 2தோன்றினானாக யான் அவனை வளைந்து பிடித்துக்கொண்டேன்; அதனாற் பெற்றதென்? அங்ஙனம் பிடித்துக் காண்பேனாகப் பையென விழிக்க, யான் பிடித்தகையுள்ளே மறைந்து தோன்றானாயினான்; இனி யான் ஞாயிற்றைக் கொண்டே அவனைக் காண்பேனென்றுகருதி இருந்து மற்றைநாள் அந்தியிலே ஞாயிற்றை நோக்கிக் கிரணங்களைப் பிறர்க்குப் பகுத்துக் கொடாத ஞாயிறே! அக்கதிர்களோடே நீ அத்தகிரியை அடைகின்றாயாயின் அவரை நினைத்துத் தேடிப் பிடித்துக்கொண்டு என்முன்னே நிறுத்தி என்கையிலே உன்கையை நீட்டித் தப்பாமற் றருவையாயின் உயிர்திரியாக என்னெஞ்சாகிய அகலிலே கொளுத்திய காமத்தீ அவியும் என்றேன்; அதற்கு மறுமொழி தாராது அத்தகிரியே போகலின் அதனை நோக்கி, மறுவில்லாத சுடரே! அத்தகிரியைச் சேர்கின்றாயாயின் நீ கடலினீரிடத்தே மீண்டு வந்து தோன்றிப் பகற்பொழுதை உண்டாக்குமனவும் (2) தானெழுதுந்தொய்யிலை எழுதாமற் கெடுத்தவனை யான் தேடுவேன்; யான் தேடும்படி எனக்குக் (1) கைவிளக்காகச் சில 


1. (அ) ‘‘காவலர் கடுகினும்’’ குறிஞ்சி. 240. (ஆ) ‘‘துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்’’ அகம். 122 : 6. (இ) “யாமங் கொள்பவர் சுடர் நிழற்கதூஉங், கடுமுரண் முதலைய நெடுநீரி லஞ்சி’’ புறம். 37 : 9-10. என்பவற்றாலும் பண்டைக்காலத்தே இராப்பொழுதில் ஊர்காவலர் துயிலாது விளக்கொடு விரைந்து சென்று ஊர்காத்தனரென்பது அறியலாகும்.

2. (அ) ‘‘கரும்பும் வல்லியும் பெருந்தோ ளெழுதி” என்பதன் விசேடவுரையில், ‘கரும்பையும் வல்லியையும் தோளிலே எழுதியெனவே தொய்யிலொன்றையும் முலைமே லெழுதியென்பதாயிற்று’ என்று (சிலப். 2 : 19. அடியார்க்கு) இருப்பதனால் தொய்யிலென்பது வல்லியின் வேறென்பது அறியலாகும்.

(பிரதிபேதம்)1நெஞ்சம் இது பின் வருத்த, 2தோணினானாக.