பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்891

சில கிரணங்களைப் பகுத்துத் தாராய் என்று கூறினேன்; அச்சுடரும் யாம் அதனைக் கொடுத்தால் அவனைக் கண்டு துனித்து வருந்துவேனென்று உட்கொண்டு அதனைத்தாராது போயவாறுணர்ந்து அவன் எம்மை முன்னர் விரும்பிப் பின்னர் நலத்தைச் 1சிதைத்தானாயினான்; இங்ஙனஞ்சிதைத்தவனை எதிர்ப்பட்டால் யான்கூடாமல் வேறுசெய்வது எவன்கொலென்றுகருதி அத்தகிரியிலேவீழ்கின்ற காலத்து (2) மன்றத்தின் 2பனைமேலே தோன்றும் மலையிடத்து மாந்தளிர்போலும் நிறத்தையுடைய வெயிலே! என் மென்றோளை மெலிவித்தானது வடிவழகின் றன்மை 


(ஆ) ‘‘தொய்யில் முதலிய பத்திக்கீற்று’’ என (சிலப். 5 : 226. அடியார்க்கு) வருதலும்காண்க; தொய்யிலென்பது ஒரு நீர்க்கொடி; இது (இ) ‘‘நெய்தலுறழக் காமர், துணிநீர் மெல்லவற் றொய்யிலொடு மலர’’ என்பதனால், விளங்கும். இவற்றால் தொய்யிலென்பது முதலில், தொய்யிற்கொடிபோன்ற கோலத்துக்கே சிறப்புப்பெயராயிருந்துபிறகு கோலப்பொதுவுக்கு பெயராயிற்றென்று தோற்றுகிறது. (ஈ) ‘‘கொழுது தேனிமிர் தொடையலங் கோனவனழகு, முழுதுங் காணிய தம்மெதிர் முன்னவெங் களிற்றுக், கெழுது தொய்யிலைக் கரும்பிதோவென்று காட்டுனர்போற், பழுதிலாமணிக்கச் சுகநிற்பர்கள் பல்லார்’’ காஞ்சி. நகரேற்று. 219. என்பதும்நோக்குக. (உ) ‘‘ஐய விரும்பிநீ, யென்றோ ளெழுதிய தொய்யிலும்’’ (ஊ) ‘‘வரிதேற்றாய் நீயென வணங்கிறை யவன்பற்றித், தெரிவேய்த்தோட் கரும்பெழுதித் தொய்யில்செய் தனைத்தற்கோ’’ (எ) “நெடுமென்றோட், பெய்கரும் பீர்க்கவும் வல்ல னிளமுலைமேற், றொய்யி லெழுதவும் வல்லன்’’ (ஏ) ‘‘உதுக்காணந், தொய்யில் பொறித்தவழி’’ கலி. 18 : 2 - 3, 76 : 14 - 15, 143 : 31 - 33, 144 : 34. (உ) “சண்பக மாலைவேய்ந்து சந்தனம் பளிதந் தீற்றி, விண்புக நாறு சாந்தின் விழுமுலைக் காம வல்லி, கொண்டெழுந் துருவு காட்டி முகத்திடைக் குளித்துத் தோண்மேல், வண்டளி ரீன்றுசுட்டி வாணுதல் பூப்ப வைத்தான்’’ சீவக. 1081. என்பவற்றால் தலைவன் தொய்யிலெழுத லுண்டென்பது அறியப்படும். இது சந்தனம் தேவதாரம், அகில் குங்கும முதலியவற்றின் குழம்பால் எழுதப்படுமென்பர்.

1. (அ) ‘‘இருளை நீங்கக் கைவிளக் கேந்தி யாங்கு’’ (ஆ) ‘‘காய்பொற்கடிகைக் கதிர்க்கைவிளக் கேந்தி’’
இ) ‘‘இருளை நீங்கக், காட்டினார் தேவ ராவர் கைவிளக் கதனை’’ சீவக. 1542, 2350, 2729. (ஈ) ‘‘இருளே யுலகத் தியற்கை யிருளகற்றுங், கைவிளக்கே கற்ற வறிவுடைமை’’ அறநெறி. 146.

2. (அ) ‘‘மன்றப் பெண்ணை’’ நற். 303 : 4. (ஆ) ‘‘மன்றிரும் பெண்ணை’’ குறுந். 177. 

(பிரதிபேதம்)1சிதைத்தானாகி யிங்ஙனஞ், 2பணைமேலே.