யான் விரும்பிக் காண்பதல்லது அவன் 1செய்த நன்று தீதென்று கூறுகின்ற பிறவற்றைக் காணேன்; என்னையொழியப் பழைதாக இவ்வுலகத்து மகளிரும் தத்தங்கணவரைக் கண்டாற் கூடுவதன்றித் துனந்திருந்தாரென்று கேட்டும் அறிவையோ என்று 2கூறினேன்; அங்ஙனங் கூறி, காமநோய் என் மனத்தைச் சுழலப் பண்ணி நெருப்பாக நின்று சுட்டதாயினும் தோன்றாமல் மனத்துள்ளே மறைப்பேன்; அதனை, மறைத்தாற்போலே அழகிய இதழ்போலுங் கண் தன்னிடத்தே கொண்டுநின்ற காமநோயை உறுகின்ற வெவ்வியநீரையும் மறைப்பேன்; அதற்குக் காரணம் அந்நீரைத் தெளிப்பின் அளிக்கத்தக்க இவ்வுலகு வேவதொன்றாய் இருத்தலின் என்று யான் ஆற்றிய அருமையுங் கூறினேன்; இதுகாறும் யானுற்ற 3வருத்தம் இதுதானென்று நின்றசான்றோரைநோக்கிக் கூறி, பின்னரும் சான்றீர்! நலியும் காமமுங் கௌவையுமென்று சொல்லப்படும் இரண்டு விழுமம் உயிர் (1) 4காவாக இரண்டு புறத்துந்தூங்கி என்னை நலியும்; இதனை இங்ஙனம் உயிர்மெலியுமளவும் வலிதிற் பொறுத்தேன்; இனி இறந்துபடுவதற்குமுன்னே இதனைக் களைவீராக என்று கூறினாள்; என்று சொல்லி, பகலும் இரவும் கூட்டமின்றிக் கழிந்தன என்று எண்ணி வருந்தி அழுதனள்; அழுது நீடுநினைந்து நொந்து உயிர்த்தனள்; அதன்பின்னர் விளக்கத்தையுடைய இராக்காலத்தே வந்து வரைந்துகொண்ட கே ள்வன் இவன் (?) நல்ல அழகினையுடைய மார்பனைப் புணர்ந்து, தேய்க்குங் காலத்தே சிதைக்கின்ற (2) தேற்றாவினுடைய விதையைக்கொண்டு கலத்தே மெல்லத் தேற்றக் கலங்கிய நீரிற் சிதைவு தெளியுமாறுபோலத் தன் சிதைவு தெளிந்து பழைய நலத்தைப் பெற்றாள்; ஆதலான், யாமும் இவர்களை அறுதியாக மணியும் அதனிற் பிறந்த 5நீரும் போலே வேறெல்லரென்று துணியக் கடவாமென்று கண்டார்கூறிற்றாகப் 6பொருளுரைக்க. எ - று. ஒஒ இரக்கக் குறிப்பு. நகுதிரோ என்னும் ஓகாரம் ஐயம். நல்ல நகாலிரென்றது மிகவும் நல்ல சிரிப்பினையுடையீராவீர், நல்லீர்கொல்லோ? அது நல்ல சிரிப்பாகாதே என நின்றது. ‘எற்சிதை செய்தான்’ 7இவனென என்றது, முன் ‘யானுற்ற அல்லலுறீஇயான்’ என்றதனையேயாகக்கொள்க. உரன் - அறிவு, ‘‘உரவோ ரெண்ணினும்’’ (3) என்றார் பிறரும். என்னுடைய
1. கா - இரண்டு பக்கங்களிலும் பண்டங்களைக் கட்டி தோளிற் சுமக்கப்படும் மரம்; காவடித் தண்டு என்று கூறப்படும். 2. இம்மரம் நூல்களில், ‘தேறு’ என்றும் வழங்கும். 3. பதிற். 73 : 1. (பிரதிபேதம்)1செய்த தீதென்று, 2கூறினெங்ஙனங், 3வருத்தமென்றுநின்ற, 4காவலாகவவ்விரண்டு புறத்துந்தூக்கி, 5நீர்மையைப்போல, 6பொருளுரைக்க ‘‘சொல்லொடுங், 7இவனென நின்றது.
|