பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்893

(1) நெய்தன் மலரன்னகண்கள் இங்ஙனம் 1வருத்தத்தையுடையனவாகி மிகப் பசப்பனவோ பசவாவே என ஓகாரம் எதிர்மறை.

‘‘சொல்லொடுங் குறிப்பொடு முடிவுகொ ளியற்கை புல்லிய கிளவி யெச்ச மாகும்’’ (2) என்பதனாற் சொல்லெச்சமுங் குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவுதோன்ற ஆசிரியர் 2நவ்வந்துவனார் செய்யுட்செய்தார்.

3எல்லிர நல்கியவென்றும் பாடம். மென்றோ ணெகிழ்த்தான் றிறமல்லாலென்பதும் பாடம்.

இதனுள் அந்திக்காலத்தே கையறவெய்திப் பின்னர்ச் சான்றோரை நோக்கிக் கூறுகின்றவள் புல்லாராமாத்திரை என்று அவனோடு புணர்ச்சி நிகழ்ந்தமையுங் கூறி யாவருங் கேட்ப நக்கழுது அல்லலுறீஇயானெனப் பெயரும் பெற்றியுங் கூறிப் புல்லிப் புணரப்பெறின் இகழ்ச்சியன்றாமெனக் கூறத்தகாதன கூறலின் மடந்தன்னை இறந்தவாறும் தெள்ளியேமென்றதனானும் எள்ளியிருக்குவே னென்றதனானும் வருத்தமிறந்தவாறும் ‘‘கோடுவாய் கூடா........கொன்றையவன்’’ என்றதனால், தான்செய்ததனை வியவாமையின் மருட்கையிறந்தவாறும் நெய்தன்மலரன்ன கண்ணெனத் தன்வனப்பு மிகுதி கூறலின் மிகுதி 4யிறந்தவாறுங் காண்க.

இதனுறுப்புக்களுட் தலைவிக்குக் (3) 5கலக்கமென்னும் மெய்ப்பாடு பிறந்தது.

எல்லிரா நல்கிய கேள்வ னிவ னெனவே 6கந்தருவத்தின் வழுவிப் பெருந்திணை நிகழ்ந்தவாறும் பின்னர் வரைவு நிகழ்ந்தவாறுங் காண்க. அது புல்லாரா மாத்திரை என்றதனானுமுணர்க.

(4) இது புரிவுண்டபுணர்ச்சிஎனக் 7கலித்தளைவந்தும் ‘புல்லாராமாத்திரை யருகுவித் தொருவரை யகற்றலின்’ எனவும், ‘இனைந்துநொந் தழுதன


1. (அ) ‘‘கண்ணே ரொப்பின் கமழ்நறு நெய்தல்’’ நற். 283 : 2. (ஆ) ‘‘நெய்தற், கூம்புவிடு நிகர்மல ரன்ன, வேந்தெழின் மழைக்கணெங்காதலி’’ அகம். 83 : 12 - 14. (,இ) ‘‘நெய்தற் போதனைய வுண்க ணேரிழை’’ திருவிளை. மாபாதகந். 36.

2. தொல். செய். சூ. 206.

3. இந்நூற்பக்கம் 882 : 1, 6-ஆம் குறிப்புக்கள் பார்க்க.

4. (அ) ‘‘புரிவுண்ட...........செவிசுவை கொள்ளாது என்பதனுள், ‘இணைந்துநொந் தழுதன ணினைந்துநீ டுயிர்த்தனள்’ என இயற்சீர் நிரையொன்றியும் பாவேறுபடாமையின் அது கலிவெண்பாட்டாயிற் றென்பது கொள்க’’ என்று பேராசிரியருரையிலும்

(பிரதிபேதம்)1வருந்த மிகப், 2நல்லந்துவனார், 3எல்லீரு நல்கியவென்றே பாடம், 4இறந்தவாறு கூறியவாறுங் காண்க, 5கலக்க மெய்ப்பாடு எல்லீர நல்கிய, 6கந்திருவத்தின், 7கலித்துளையும் வந்து புல்லாரா.