பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்895

னின்னுயி ரன்னாற் கெனைத்தொன்றுந் தீதின்மை
யென்னுயிர் காட்டாதோ மற்று;
22 பழிதபு ஞாயிறே பாடறியா தார்கட்
கழியக் கதழ்வை யெனக்கேட்டு நின்னை
வழிபட் டிரக்குவேன் வந்தேனென் னெஞ்ச
மழியத் துறந்தானைச் சீறுங்கா லென்னை
யொழிய விடாதீமோ வென்று;
27 அழிதக, மாஅந் தளிர்கொண்ட போழ்தினா னிவ்வூரார்
தாஅந் தளிர்சூடித் தந்நலம் பாடுப
வாஅந் தளிர்க்கு மிடைச்சென்றார் மீடரின்
யாஅந் தளிர்க்குவே மன்;
31 நெய்த னெறிக்கவும் வல்ல னெடுமென்றோட்
பெய்கரும் பீர்க்கவும் வல்ல னிளமுலைமேற்
றொய்யி லெழுதவும் வல்லன்றன் கையிற்
சிலைவல்லான் போலுஞ் செறிவினா னல்ல
பலவல்லன் றோளாள் பவன்;
36 நினையுமென் னுள்ளம்போ னெடுங்கழி மலர்கூம்ப
வினையுமென்னெஞ்சம்போ லினங்காப்பார்குழறோன்றச்
சாயவென் கிளவிபோற் செவ்வழியா ழிசைநிற்பப்
போயவென் னொளியேபோ லொருநிலையே பகன்மாயக் 
காலன்போல் வந்த கலக்கத்தோ டென்றலை
மாலையும் வந்தன் றினி;
42  இருளொடியா னீங்குழப்ப வென்னின்றிப் பட்டா
யருளிலை வாழி சுடர்;
44 ஈண்டுநீர் ஞாலத்து ளெங்கேள்வ ரில்லாயின்
மாண்ட மனம்பெற்றார் மாசி றுறக்கத்து
வேண்டிய வேண்டியாங் கெய்துதல் வரயெனின்
யாண்டு முடையே னிசை;
48 ஊரலர் தூற்றுமிவ் வுய்யா விழுமத்துப் 
பீரலர் போலப் பெரிய பசந்தன