பக்கம் எண் :

896கலித்தொகை

நீரலர் நீல மெனவவர்க் கஞ்ஞான்று
பேரஞர் செய்தவென் கண்;
52 தன்னுயிர் போலத் தழீஇ் யுலகத்து
மன்னுயிர் காக்குமிம் மன்னனு மென்கொலோ
வின்னுயி ரன்னானைக் காட்டி யெனைத்தொன்று
மென்னுயிர் காவா தது;
எனவாங்கு;
57 மன்னிய நோயொடு மருள்கொண்ட மனத்தவள்
பன்மலை யிறந்தவன் பணிந்துவந் தடிசேரத்
தென்னவற் றெளிந்த தேஎம்போல
வின்னகை யெய்தின ளிழந்ததன் னலனே.

(1) இதுவுமது. இதற்கும் (2) முற்கூறிய உரைகளைக் கூறிக்கொண்டு பொருளுரைக்க.

இதன் பொருள்

(3) அகலாங்க ணிருணீங்கி யணிநிலாத் திகழ்ந்தபிற்
பகலாங்கட் பையென்ற மதியம்போ 1னகலின்று
நன்னுத னீத்த திலகத்தண் மின்னி
மணிபொரு பசும்பொன்கொன் (4) மாவீன்ற தளிரின்மேற்
கணிகாரங் கொட்குங்கொ லென்றாங் கணிசெல
(5) மேனி மறைத்த பசலைய ளானாது
நெஞ்சம் வெறியா நினையா நிலனோக்கா
வஞ்சா வாழஅ வரற்றா 2விஃதொத்தி
யென்செய்தாள் கொல்லென்பீர் கேட்டீமின் பொன்செய்தேன்

1. இச்செய்யுளும் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமாகிய பெருந் திணைக்கு மேற்கோள்; தொல். அகத். சூ. 13. நச்.

2. இந்நூற்பக்கம் 885 - 886. பார்க்க.

3. (அ) ‘‘முழவிமிழு மகலாங்கண்’’ மது. 327. (ஆ) ‘‘அகலு ளாங்கண்’’ குறிஞ்சி. 4.

4. ‘‘மாவீன்ற தளிர்மிசை மாயவ டிதலைபோ, லாயிதழ்ப் பன்மல ரைய கொங் குறைத்தர’’ கலி. 29 : 7 - 8. என்பதும் இந்நூற்பக்கம் 158 : 3-ஆம் குறிப்பும் பார்க்க.

5. ‘‘பசந்த மேனியள் படர்நோயுற்று’’ சிலப். 13 : 68.

(பிரதிபேதம்)1நகலான்று, 2இஃகுதொத்தி.