பக்கம் எண் :

902கலித்தொகை

44  (1) ஈண்டுநீர் ஞாலத்து ளெங்கேள்வ ரில்லாயின்
மாண்ட மனம்பெற்றார் மாசி றுறக்கத்து
வேண்டிய வேண்டியாங் கெய்துதல் வாயெனின்
யாண்டு முடையே னிசை
48 ஊரலர் தூற்றுமிவ் வுய்யா விழுமத்துப்
(2) பீரலர் போலப் பெரிய பசந்தன
(3) நீரலர் (4) நீல மெனவவர்க் கஞ்ஞான்று
பேரஞர் செய்தவென் கண்
52  (5)தன்னுயிர் போலத் தழீஇ 1யுலகத்து
மன்னுயிர் காக்குமிம் மன்னனு 2மென்கொலோ
வின்னுயி ரன்னானைக் காட்டி யெனைத்தொன்று
மென்னுயிர் காவா தது
எனவாங்கு

1. ‘‘ஈண்டுநீர் மிசை’’ கலி. 100 : 1.

2. இந்நூற்பக்கம் 276 : 5, 322 : 3 -ஆம் குறிப்புக்கள் இங்கே அறிதற்பாலன.

3. ‘‘நீர்கால் யாத்த நிரையிதழ்க் குவளை, கோடை யெற்றினும் வாடாதாகும்’’ குறுந். 388. 

4. (அ) ‘‘நீலத் தலர்வென்ற வமருண்கண்,..................வேலிற், சேந்து நீ யினையையா லொத்ததோ சின்மொழி ............கணையினு நோய் செய்தல் கடப்பன்றோ கனங்குழாய்’’ கலி. 57 : 9-15. (ஆ) ‘‘பூவொத் தலமருந்தகைய வேவொத், தெல்லாரு மறிய நோய்செய் தனவே’’ குறுந். 72.

5. (அ) ‘‘அறனிழலெனக்கொண்டா யாய்குடை யக்குடைப், புறநிழற்கீழ்ப்பட்டாளோ விவளிவட் காண்டிகா, பிறைநுதல் பசப்பூரப் பெருவிதுப் புற்றாளை’’ கலி. 99 : 8 - 10. என்பதும் (ஆ) அதன் குறிப்பும்
(இ) ‘‘நின்று பல்லுயிர் காத்தற்கு நேர்ந்தயா, னென்றுணைக்குலமங்கையொ ரேந்திழை, தன்றுயர்க்குந் தகவிலெ னாயினே, னன்று நன்றென் வலியென நாணுமால்’’ கம்ப. அயோமுகி. 16. (ஈ) ‘‘தன்னுயிர்போல மன்னுயிர்க் கிரக்குந் தயவினோன்’’ மச்ச. பிரயாகையிற் பலசொரூபகதன. 12.

(பிரதிபேதம்)1யுலத்து, 2என்கொலெம்முன்னுயிரென்.