57 | மன்னிய நோயொடு மருள்கொண்ட மனத்தவள் பன்மலை யிறந்தவன் பணிந்துவந் தடிசேரத் 1தென்னவற் றெளித்த தேஎம்போல வின்னகை யெய்தின ளிழந்ததன் னலனே |
எ - து: அங்ஙனங் 2கூறியவள் அது கொண்டுவருதலுங் கூடும்; அதனோடே நீருங் கூடி (1) நவகண்டமெனக் கூறுபடுத்தின 3உலகத்தின் கண்ணே அவனை ஆராய்ந்து நீர் பிடித்துக்கொண்டு எனக்குத் தரப்பெறில் யானும் 4பிறமகளிரைப் போல அறுதியாக (2) ‘நிறையென்னுங் குணமுடையேனாவேன் 5என்றுங் கூறினாள்; அதுகேட்டவர்கள் அதற்கு மறுமொழி கொடாமற் பின்னே வந்தமையின், இவள் ஒருநாளிலேயாயினும் அவனைப் பொருந்தி 6முயங்குமென்று கருதி, என்பின்னே வாராநின்றீர்; பின்னை இவள் அப்பொழுதே ‘முன்புபோலன்றி மிகவும் வருந்தினாள் என்று கருதி அவ்விடத்தே நின்று அவனுக்கு ஓர் தீங்கு நிகழ்ந்ததோவென்று உசாவா நின்றீர்; அவ்வருத்தமேயன்றி ஐயோ இவள் கையறவு எய்தினாளென்று மருளாநின்றீர்; இங்ஙனம் உண்மையுணராமற் கலங்காதேகொள்ளும்; பின்னை என் இனிய உயிரை ஒப்பானுக் கியாதொன்றுந் தீதின்றி அவனுள னாயிருக்கின்றமையை (3) அவனுயிரோடு ஒன்றாகிய என்னுயிர் ஈண்டுக் காட்டாதொழியுமோ? அதுதான் இறந்துபடாது அவனிருந்தமை காட்டிற்றில்லையோ என்றாள்; அதுகேட்டவர்கள் தனக்கு ஒரேதமின்றி நின்று நின்னை இங்ஙனம் வருத்தினவனை நடுவாக நோக்கி நின்ற ஞாயிறு தான் வருத்துங்காண் என்றார்; அது கேட்டு நடுவுநிலைசெய்யாமல் உண்டாம்பழி நீங்கும் ஞாயிறே! உலகியல் அறியாதாரிடத்துக் கழியச்சீறுதற்கு விரைந்து 7செல்வையென்று இவர்கள் கூறக்கேட்டு நின்னை வழிபட்டு நீ அவரை மிகச் சீறாதபடி இரந்துகொள்வேனாக வந்தேன்; நீ என்னெஞ்சங் கெடும்படி என்னைக்கைவிட்டவனைக் 8கண்டுசீறுமிடத்து என்னை நீங்கவிடாதே கொள்;
1. (அ) ‘‘வடபால்விதேகந் தென்பால்விதேகங், கீழ்பால்விதேக மேல்பால் விதேகம், வடபாலிரேவதந் தென்பாலிரேவதம், வடபாற்பரதந் தென்பாற்பரத, மத்திமகண்டமென் றித்திற மென்ப, நாவலந் தீவி னவ கண்டப்பெயரே’’ சேந்தன்றிவாகா. (ஆ) ‘‘நவத்தாரணி யாதிகட்கு’’ திருவானைக்காப். திருநீற்றுத்திருமதிற். 8. 2. இந்நூற்பக்கம் 419 : 6-ஆம் குறிப்புப் பார்க்க. 3. ‘‘காவிபோற் கண்ணிக்குங் கண்ணியந்தோட் காளைக்கு, மாவிபோலாடையுமொன் றானதே’’ நள. கலிதொடர். 84. (பிரதிபேதம்) 1 தென்னவர்த் தெளிந்த, 2 கூறியவள் கொண்டு, 3 உலத்தின்கண்ணே, 4 பிறர்மகளிரை, 5என்று கூறினாள், 6முயங்குவேமென்று, 7செல்வையன்றியவர்கள்; செல்வையென்றவர்கள், 8கண்டு நீ சீறுமிடத்து.
|