காலனைப்போலே என்மேலே மாலைக் காலமும் வந்தது; இனி எங்ஙனம் ஆற்றுவேனென்று கூறினாள்; கூறி, அம்மாலையை வரவிட்ட ஞாயிற்றை நோக்கி, சுடரே! யானென்பதொரு தன்மையின்றி யான் இவ்விடத்தே இராக் காலத்தாலே வருந்தும்படி நீ போனாய்; அருளுடையையல்லையாயிருந்தாய்; 1இத்தன்மையால் நீ வாழ்வாயாக என்று கூறினாள்; கூறி, இவ்விரவால் இறந்துபட்டேனாயினும் தீங்கின் றாயிருந்ததென்று கருதி, மிகுகின்ற நீரையுடைய உலகத்துள் உறைகின்ற கேள்வருளரல்லாராயின், (1) தங்கணவர்மேலுள்ள வேட்கையோடே இறந்துபடும் மாட்சிமைப்பட்ட மனத்தைப்பெற்றவர்கள் குற்றமில்லாத சுவர்க்கத்தே சென்று அவர்கள் நுகர விரும்பியவற்றைத் தாம் விரும்பியபடியே பெறுதல் மெய்யென்று நூல்கள் கூறியவென்னின் யானும் அங்ஙனம் அவன்மேல் விருப்பத்தோடே உயிர்போய் அவனைப் பெற்று எவ்விடத்தும் புகழுடையேனாவேன்; இனி 2வருத்தமின்று; என்றுங் கூறினாள்; கூறி (2) ‘‘முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் கண்டு விடும்’’ என்றுகூறிய பழமொழி உளதாகலின், அவ்வாறே நீரில் அலர்ந்த நீலமென்று அவர் புகழ அவர்க்கு அந்நாளிற் பெரியவருத்தத்தைச்செய்த என்கண்கள் இப்பொழுது பீரலர்போலப் பெரியவாகப் பசந்தன; அதனையும் என் வருத்தத்தையுங் கண்டும் அருளின்மையின் அவனை எனக்குக் காட்டாமல் இவ்வூர் நின்று அலர் தூற்றா நிற்கும்; இனி இவ் (3) வுய்யா விடும்பையிடத்து உயிர்களைக் காத்தற்கு யான் அரசனே என்று கருதித்
இஃது இரங்கற்பண்ணென்பது (இ) ‘‘பையு ணல்லியாழ் செவ்வழிபிறப்ப’’ அகம். 314 : 12 என்பதனாலும் (ஈ) இக்குறிப்பில் முதலாவதற்கு, ‘மாலைக்காலம் வந்தவளவிலே சிறிய யாழை இரங்கற் பண்ணாகிய செவ்வழியென்னும் பண்ணிலே வாசிக்கும் பரிசுபண்ணி’ என்று எழுதியிருக்கும் உரையாலும் அறியலாகும். 1. ‘அதுவன்றிப் புகழ்வேண்டியும் கணவனொடு செத்தார் சுவர்க்கம் புகுவரென்னும் உரைகேட்டு அதுவேட்கையானும் சாம்; அப்பரிசன்றி அன்பினானும் சாம்’ என்பது இறை. சூ. 1. உரை. 2. (அ) ‘‘பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா, பிற்பகற் றாமே வரும்’’ குறள். 319. (ஆ) ‘‘முற்பகற் செய்தான பிறன்கேடு தன்கேடு, பிற்பகற் காண்குறூஉம் பெறறியகாண்’’ சிலப். 21 : 3-4. (இ) ‘‘முற்பகற்செய்யிற் பிற்பகல் விளையும்’’ கொன்றைவேந்தன். (ஈ) ‘‘முற்பகற் செய்வினை பிற்பக லுறுநரின்’’ பெருங். (1) 56: 259. (உ) ‘‘முற்பக லோர்பழி முடிக்கின் மற்றது, பிற்பக றமக்குறும் பெற்றி யென்னவே’’ கந்த. இரண்டாநாட்சூர. 365. உய்யா இடும்பை - பிழையாமைக்குக் காரணமான துன்பம்; கலி. 139 : 18. கடக்க முடியாததுன்பம்; குறள். 313. பரி. ஒழியாததுன்பம்; பு. வெ. உழிஞை. 25. போக்க முடியாத துன்பம்; சிலப். 7 : 8. (பிரதிபேதம்)1இத்தன்மையான நீ, 2வருத்தமென்றென்றுங், இதனையும் வருத்தத்தையும்.
|