| வீரமில் கேள்வ னுறீஇய காமத்தீ நீருட் புகினுஞ் சுடும் | 63 | ஒஒகடலே, (1) எற்றமி லாட்டியென் னேமுற்றா ளென்றிந்நோ யுற்றறியா தாரோ நகுக நயந்தாங்கே யிற்றா வறியின் முயங்கலேன் மற்றென்னை யற்றத்திட் (2) டாற்றறுத்தான் 1மார்பு |
எ - து: அங்ஙனங் கூறி, அது கரிய மேகத்தே மறைந்து விடுதலின் அதனை நோக்கித் தேடுமாறு அதற்குக் கூறக் கருதி, அக்கள்வனானவன் மறைந்திருக்கக்கடவனோ என்று 2காட்டும்படி, யான் நீண்ட இலையினையுடைய தாழை நிற்கின்ற சிவந்த மணலையுடைய கானலிற்
சுடும்” நாலடி. 90. (ஆ) “அளிக்கு மெய்யுயிர் கான்றழ லஞ்சினள், குளிக்கு நீருங் கொதித்தெழக் கூசுமால், விளிக்கும் வேலையை வெங்கணனங்கனை, யொளிக்க லாமிடம் யாதெனவுன்னுமால்” கம்ப. சூர்ப்ப. 79. (இ) “உள்ளினுஞ் சுட்டிடு முணருங் கேள்வியிற், கொள்ளினுஞ் சுட்டிடுங் குறுகி மற்றதைத், தள்ளினுஞ் சுட்டிடுந் தன்மை யீதினாற், கள்ளினுங் கொடியது காமத் தீயதே” கந்த. மாயைநீங்கு. 11. (ஈ) “கடலின் மூழ்கினுங் குன்றிடை யொளிப்பினுங் காம, முடல் விராயுயிர் சுடுவதே போலும்” விநாயக. இந்திரன் சாபம். 34. 1. (அ) எற்றமென்னு முரிச்சொல் துணிவாகிய குறிப்புணர்த்தற்கு, “ஏற்றமி லாட்டியென் னேமுற்றாள்” என்பது மேற்கோள்; தொல். உரிச். சூ. 39. நச். நன். உரி. சூ. 18 இரா. மேற்கூறிய இடங்களிலெல்லாம் இச்சொல், ஏற்ற மென்று பதிப்பிக்கப்பெற் றிருத்தல் பிழையே. அது பிழையென்பதும் எற்றமெனறலே திருத்தமென்பதும் தொல்காப்பியச் சூத்திரத்தை உய்த்து ணர்வார்க்குப் புலனாம். இதனை இங்கே காட்டப்படும் சான்றோர்கள் ஆட்சியும் வலியுறுத்தும். (ஆ) “எற்றிவரைந்தானை” கலி. 146 : 11. (இ) “எற்ற முடைமை யெதிர்கோளி னறிப” முதுமொழி. 15. (ஈ) “எற்றமி லாள ராகி” திருவானைக்காப். நைமிசப். 29. 2. (அ) “அரும்பிடி நம்மை யாற்றறுத் தன்றால்” (பெருங். (1) 53:7) என்பதும் (ஆ) “ஆற்றறுப்பார்” (குறள். 798) என்பதன் விசேடவுரையில், ‘ஆற்றென்பது முதனிலைத் தொழிற்பெயர்; முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின் வலியறுப்பாரென்றார்’ என்று பரிமேலழகர் எழுதியிருப்பதும் இங்கே அறிதற்பாலன. (பிரதிபேதம்)1மார்பு. ஆங்கு கடலொடு...............பசப்பே. எ - து: அங்ஙனம் கூறி அது கரிய, 2காட்டக்கருதி யான்.
|