பக்கம் எண் :

916கலித்தொகை

பொழில்கடோறும் ஓடிச் சென்று பார்ப்பேன்; அங்ஙனஞ் சென்று பார்த்துக் காணாமையின், ஓடிச் சென்று அவனை ஒளித்திருந்து காணக் கடவேனென்று கருதி ஒளித்திருப்பேன்; நீயும் இங்ஙனம் ஒளித்திருந்தே தேடென்று கூறினாள்; அங்ஙனங் கூறிப் பின்பு அவனிருக்கும் இடங்களுங் கூறக்கருதி, பூவினையுடைய 1அடும்பின்மலரைக் கொண்டு எமக்குத்தருங் கோதையைக் கட்டின இடத்தை உவ்விடத்தே பாராய்; அமைதியில்லாதான் யாங் கொண்டு விளையாடுஞ் (1) சாய்ப்பாவையையும் மலர்களையுங் கொண்டுவந்து நமக்குக் காட்டி யான் தன்பின்னே செல்லும்படி அவற்றைக் 2கொண்டோடிய இடத்தை உவ்விடத்தேபாராய்; எமக்குத் தானெழுதுந் தொய்யிலை எழுதிய அவ்விடத்தை உவ்விடத் தேபாராய்; மனத்தில் அறனில்லாதவன், தையால்! நின்னைப் பிரியேன்; நீ தெளியென்று தெளிவித்துப் பின்னர் மெல்ல முயங்கிய அவ்விடத்தை உவ்விடத்தே பாராயென்று கூறினாள்; அங்ஙனங் கூறின அளவிலே அம்முயல் 3கருமேகத்து மறைந்தேபோதலின் அதனைக் கைவிட்டு இடையே தன்மேல் வந்துற்ற வளியை நோக்கி, வளியாகிய தெய்வமே! [நீ] திங்களின் ஒளி போலன்றி விசும்பிடத்தும் ஞாலத்திடத்தும் பரக்கும் பல கதிர்களையுடைய ஞாயிற்றின் ஒளியுள்ள இடமெல்லாஞ்சென்று நாடுதற்குரிய நீ 4உயவுத்தேரை ஊர்ந்துவந்து தன்னால் அளிக்கத்தக்க என்னுள்ளத்திடத்தே கெடாத காம நோயைச்செய்து என்னைக் கைவிட்டுப்போன அன்பிலாதவனை அந்நோய் நீங்கி என்மனந் தெளியும்படியாக எதிர்ப்படுவாய்; அங்ஙனம் எதிர்ப்பட்டு வேட்கை மிகுதியான் எம்முடைய இயற்கை நலத்தை நுகர்ந்து பின்பு எம்மை ஒரு காரணமின்றி வெறுத்து அவ்வியற்கை நலத்தைக்கொண்டு இம்மண்ணகத்தே ஒளித்தவனைக் கொண்டுவந்து காட்டுவாய்; காட்டாயாகில் என்கண்ணீரைத் தெளித்து அதன்கண் எழுகின்ற அழலாலே நின் மேனியெல்லாஞ் சேரச் சுடுவேனென்றுங் கூறினாள்; அங்ஙனங் கூறி அதனைப் பின்னர்க் காணாமையின், தான் அவனைத் தேடக்கருதி, கடலை நோக்கி, மிக்கு வருகின்ற கரிய கடற் றெய்வமே! என்னைப் பாதுகாவானாய்த்துறந்தவனை யான் தேடிக் காணுமிடத்தை நீ விட்டுப் போகாமல் ஏறுவாயாயின் நின்னிடமெல்லாம் வெறுமணலாம்படி என் காற்புறத்தாலே நின்னுடைய நீரெல்லாம் போம்படி இறைப்பேன்; அது முடியுமோவெனின், அங்ஙனம் 5முயலின் அதற்கு அறக் கடவுள் உதவியாதலு முண்டாயிருக்குமென்றுங் கூறினாள்; அங்ஙனங் கூறி, ஓதம் வடிந்ததனைக் கண்டு என்னைக் கைவிட்டுப்போனவனை நீ தேடிக்கொண்டு வந்து தருவையாயின் அதற்குக் கைம்மாறாக என்னோயைச்சொல்லி நினக்கு ஒரு பாட்டினைப் 


1. சாய்ப்பாவை - தண்டான் கோரையைக் கிழித்துச் செய்த பொய்ம்மை; (அ) “சாய்க்கொழுதிப் பாவைதந் தனைத்தற்கோ” (கலி. 76: 7) என்பதும் அதனுரையும் (ஆ) “பைஞ்சாய்ப் பாவை யீன்றனென்யானே” (ஐங். 155) என்பதும் இங்கே அறிதற்பாலன.

(பிரதிபேதம்)1அடம்பின், 2கொண்டாடியவவிற்றை உவ்விடத்தே, 3கருத்தமேகத்து, 4உரவுத்தேரை, 5முயலுவேன் அதற்குக் கடவுள்.