பாடுவேனென்றுங் கூறினாள்; அங்ஙனங் கூறிப் பாடுகின்றவள் என்னைக் கூடின கேளிர் வந்து கூடுங் காலம் இரவோ பகலோ என்றறியேன்; ஆதலால் என்னை வருத்தும் பகற்பொழுதுபோய் இராப்பொழு தாவதாக என்று கருதிப் பகற் பொழுதை வெறுப்பேன்! அதுபோய் இராவான காலத்திடத்து அவ்விராக்காலத்தை 1அப்பொழுதேவெறுப்பேன்; அப்படியே ஓஓ! யான் உற்ற வருத்தத்தைக் கடலே! நின்னை ஒழியப் போக்குவாரை வேறுடையே னல்லேனென்றுங் 2கூறினாள்; அங்ஙனங் கூறிப் பின்னும், கடலே! அறனில்லாதவன் தெளிய என் கண்ணுள்ளேவந்து தோன்றுகையினாலே கூடின இமையை விழித்துப் பிடித்துக் கொள்வேனென்று கருதி யான்விழிக்கப் பின்னையும் ஓடிப்போய் என்னெஞ்சத்துள்ளே மறைந்துநின்று அப்பொழுதே யான் துயிலாத காமநோயைத் தாராநிற்கும்;கடலே! ஊரையெல்லாந் தன்க்குள்ளாக்கிக்கொண்டு காந்துங் கடியநெருப்புத் தன்னை அவிக்குநீரைச் சொரியச் (1) 3சினமாறும்; அதுபோலன்றி அருளில்லாத என்கேள்வன் என்னை உறுத்திய இந்தக் காமமாகிய நெருப்புத் தனக்குப் பகையாகிய நீருள்ளே புகினுமோ வேமாறு சுடாநிற்கும்; கடலே! தன்மனத்து ஒரு துணிவில்லாதாள் என்ன பித்தேறினாளென்று கூறி, இக்காம நோயுற்றறி யாதவர்களோ என்னை இகழ்ந்து சிரிக்க; இக்காமநோய்க்குத்துணையாவதோர் ஆளறுதியிலே பின்னே என்னை யிட்டுவைத்து என்வலியை அறுத்தவன் 4மார்பினை யான் விரும்பின அக்காலத்தே பின்பு இத்தன்மைத்தாக வருத்துமென்று அறியின் முயங்கேன்; அக்காலத்து அறிகலேன்காணென்றுங் 5கூறினாள். எ - று. ஓஓ, வருத்தக்குறிப்பு, ஓகாரம், பிரிநிலை. ஆற்றல், ஆற்றென விகாரமாயிற்று. ஆங்கு, அசை. 68 | கடலொடு புலம்புவோள் கலங்கஞர் தீரக் கெடலருங் காதலர் துனைதரப் பிணிநீங்கி யறனறிந் தொழுகு மங்க ணாளனைத் (2) திறனிலா ரெடுத்த தீமொழி யெல்லா நல்லவை யுட்படக் கெட்டாங் கில்லா கின்றவ ளாய்நுதற் பசப்பே |
1. சினம் - வெம்மை. இந்நூற்பக்கம் 102 : 3 - ஆம் குறிப்புப் பார்க்க. 2. “ஐயற் காங்கிளங் கோளரி யறிவிலா னறைந்த, பொய்யிற் போம்படி போக்கினன் கடிதினிற் புக்கான்” கம்ப. பிரமாத்திர. 70. (பிரதிபேதம்)1அப்பொழுதென்றுவெறுப்பேன், 2கூறினாள். ஓஓ, வருத்தக்குறிப்பு. அங்ஙனங் கூறி, 3சினமாறுவதுபோலன்றி, 4மார்பினவனை யான், 5கூறினாள். ஓகாாம் பிரிநிலை. ஆற்றல் விகாரம் 'ஆங்கசை, அங்ஙனம் கடலோடே.
|