எ - து: அங்ஙனங் கடலோடே வருந்திக் கூறினவளுடைய மனங் கலங்கும் வருத்தந்தீரும்படி அவள் காதலர் விரைந்து வரக் கெடுதலரிய காமநோய் நீங்கி, இவளுடைய அழகிய நுதலிற் பசப்பு, அறநெறியறிந்து நடக்குங் கண்ணோட்டமுடையவனை அத்திறமில்லாதார் உண்டாக்கிச் சொன்ன 1தீயமொழிகளெல்லாம் நன்மக்கள் இருக்கின்ற அவைக்குள்ளே ஆராய்ச்சிப்பட அவைகெட்டாற் போல, இல்லையாகாநின்றது; என்னவியப்போவெனக் கண்டார் கொண்டு கூறிற்றாக உரைக்க. எ - று. இது கண்டார்க்கு அவராக்கங் கண்டு மருட்கை பிறந்தது. 2‘மருவழிப் பட்டதென் னெஞ்ச’ என்னுந்துணையுங் கூறத்தகாதன கூறலின் மடனிறந்தவாறும் ‘அறம்புணை யாகலு முண்டு’ எனத் தன்னுடம்பும் உயிரும் வருந்திய நிலைதோன்றக் கூறுதலாற் கலக்மெய்தியவாறுங் காண்க. இஃது ‘எங்குந் தெரிந்தது கொள்வே னவனுள் வழி’ என ஐஞ்சீரான் ஒன்றும் 3‘உதுக்காண், தொய்யில் பொறித்த வழி’ என ஓரடியான் ஒன்றும் வருதலிற் கலிவெண்பாவின் வேறுபட்ட பாநிலைவகைக் கொச்சகம். (27) (145). | துனையுநர் விழைதக்க சிறப்புப்போற் கண்டார்க்கு நனவினு ளுதவாது நள்ளிருள் வேறாகுங் கனவி னிலையின்றாற் காம மொருத்தி யுயிர்க்கு முசாஅ முலம்வரு மோவாள் | 5 | கயல்புரை யுண்க ணரிப்ப வரிவாரப் பெயெல்சேர் மதிபோல வாண்முகந் தோன்றப் பலவொலி கூந்தலாள் பண்பெல்லாந் துய்த்துத் துறந்தானை யுள்ளி யழுஉ மவனை மறந்தாள்போ லாலி நகூஉ மருளுஞ் | 10 | சிறந்ததன் னாணு நலனு நினையாது காம முனைஇயா ளலந்தாளென் றெனைக்காண நகான்மின் கூறுவேன் மாக்காள் மிகாஅது மகளிர், தோள்சேர்ந்த மாந்தர் துயர்கூர நீத்தலு நீள்சுரம் போகியார் வல்லைவந் தளித்தலு | 15 | மூழ்செய் திரவும் பகலும்போல் வேறாகி வீழ்வார்கட் டோன்றுந் தடுமாற்ற ஞாலத்துள் வாழ்வார்கட் கெல்லாம் வரும்; | 18 | தாழ்பு, துறந்து தொடிநெகிழ்த்தான் போகிய கான மிறந்தெரி நையாமற் பாஅய் முழங்கி |
(பிரதிபேதம்)1தீமொழிகள், 2அருவழிப், 3உதுக்காணந் தொய்யில்.
|