பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்919

வறந்தென்னை செய்தியோ வானஞ் சிறந்தவென்
கண்ணீர்க் கடலாற் கனைதுளி வீசாயோ
கொண்மூக் குழீஇ முகந்து;
23 நுமக்கெவன் போலுமோ வூரீ ரெமக்குமெங்
கண்பாயல் கொண்டுள்ளாக் காத லவன்செய்த
பண்பு தரவந்த வென்றொடர் நோய்வேது
கொள்வது போலுங் கடும்பகன் ஞாயிறே 
யெல்லாக் கதிரும் பரப்பிப் பகலொடு
செல்லாது நின்றீயல் வேண்டுவன னீசெல்லிற்
புல்லென் மருண்மாலைப் போழ்தின்று வந்தென்னைக் 
கொல்லாது போத லரிதா லதனொடியான் 
செல்லாது நிற்ற லிலேன்;
32ஒல்லையெங், காதலர்க் கொண்டு கடலூர்ந்து காலைநாட் 
போதரிற் காண்குவேன் மன்னோ பனியொடு
மாலைப் பகைதாங்கி யான்;
35 இனியனென், றோம்படுப்பன் ஞாயி றினி;
36 ஒள்வளை யோடத் துறந்து துயர்செய்த 
கள்வன்பாற் பட்டன் றொளித்தென்னை யுள்ளிப்
பெருங்கடல் புல்லெனக் கானல் புலம்ப 
விருங்கழி நெய்த லிதழ்பொதிந்து தோன்ற 
விரிந்திலங்கு வெண்ணிலா வீசும் பொழுதினான் 
யான்வேண் டொருவனென் னல்ல லுறீஇயான்
றான்வேண்டு பவரோடு துஞ்சுங்கொ றுஞ்சாது
வானு நிலனுந் திசையுந் துழாவுமென்
னானாப் படர்மிக்க நெஞ்சு;
45 ஊரவர்க் கெல்லாம் பெருநகை யாகியென் 
னாருயி ரெஞ்சும னங்குநீ சென்றீ 
நிலவுமிழ் வான்றிங்கா ளாய்தொடி கொட்ப 
வளிபுற மாறி யருளான் றுறந்தவக் 
காதலன் செய்த கலக்குறுநோய்க் கேதிலா
ரெல்லாருந் தேற்றார் மருந்து;