பக்கம் எண் :

920கலித்தொகை

51 வினைக்கொண்டென் காமநோய் நீக்கிய வூரீ
ரெனைத்தானு மெள்ளினு மெள்ளலன் கேள்வ
னினைப்பினுங் கண்ணுள்ளே தோன்று மனைத்தற்கே
யேமரா தேமரா வாறு;
55 கனையிருள் வானங் கடன்முகந் தென்மே
லுறையொடு நின்றீயல் வேண்டு மொருங்கே
நிறைவளை கொட்பித்தான் செய்த துயரா
லிறையிறை பொத்திற்றுத் தீ;
56 எனப்பாடி;
நோயுடை நெஞ்சத் தெறியா வினைபேங்கி
யாவரு மெங்கேள்வற் காணீரோ வென்பவட்
கார்வுற்ற பூசற் கறம்போல வெய்தந்தார்
பாயல்கொண் டுள்ளா தவரை வரக்கண்டு
மாயவன் மார்பிற் றிருப்போல் பவள்சேர 
ஞாயிற்று முன்ன ரிருள்போல மாய்ந்ததென்
னாயிழை யுற்ற துயர்,

(1) இதுவுமது. இதற்கும் (2) முன்னர்க் கூறிய உரையைக் கூறிக் கொள்க.

இதன் பொருள்.

துனையுநர் விழைதக்க சிறப்புப்போற் கண்டார்க்கு
1நனவினு ளுதவாது நள்ளிருள் வேறாகுங்
(3) கனவி னிலையின்றாற் காம மொருத்தி
யுயிர்க்கு 2முசாஅ முலம்வரு மோவாள்
கயல்புரை யுண்க ணரிப்ப வரிவாரப்
பெயல்சேர் மதிபோல வாண்முந் தோன்றப்

1. இச்செய்யுளும் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமாகிய பெருந்திணைக்கு மேற்கோள்; தொல். அகத். சூ. 13. நச்.

2. இந்நூற்பக்கம் 885 - 886. பார்க்க.

3. “கனவினா னெய்திய செல்வத்தனையதே” (கலி. 68: 24) என்பதும் அதன்குறிப்பும் “கண்படைகொண் டமர்வாழ்வும் பொய்யாகிக்கனவு கண்ட கதையாயிற்றே” கந்த. காமதகன. 109. என்பதும் நோக்குக.

(பிரதிபேதம்)1நனவினுதவாது, 2உயாஅம்.