| பலவொலி கூந்தலாள் பண்பெல்லாந் துய்த்துத் துறந்தானை யுள்ளி யழுஉ மவனை மறந்தாள்போ லாலி நகூஉ (1) மருளுஞ் | 10 | (2) சிறந்ததன் னாணு நலனு நினையாது காம முனைஇயா 1ளலந்தாளென் (3) றெனைக்காண நகான்மின் கூறுவேன் மாக்காண் 2மிகாஅது மகளிர், தோள்சேர்ந்த மாந்தர் துயர்கூர (4) நீத்தலு நீள்சுரம் போகியார் 3வல்லைவந் தளித்தலு | 15 | மூழ்செய் (5) திரவும் பகலும்போல் வேறாகி வீழ்வார்கட் டோன்றுந் தடுமாற்ற ஞாலத்துள் வாழ்வார்கட் கெல்லாம் 4வரும் |
எ - து: மக்கள் விரைந்தனராய் விரும்புதல் தக்கதொரு தலைமைபோலே இருக்கின்ற காமமானது நள்ளிருட்கண்ணே கண்டவர்களுக்கு நனவின்கண் உதவாதே வேறுபட்டுப் போங் கனவினும் நிலைபெறுதல் இன்றாயிருந்தது; எவ்வாறெனிற் பலவாய்த் 5தழைகின்ற கூந்தலையுடையாளாகிய ஒருத்தி தன் குணங்களை யெல்லாம் நுகர்ந்து தன்னைக் கைவிட்டவனை நினைத்து நெட்
1. மருளுமென்பதற்கு உரை காணப்படவில்லை. 2. (அ) “உயிரினுஞ் சிறந்தன்று நாணே” தொல். கள. சூ. 22. (ஆ) “உயிரினுஞ் சிறந்ததன் னாண்யாது மிலளாகி” கலி. 147: 8 - 9. (இ) " நாணுக் குறைவில ணங்கைமற் றென்மரும்" பரி. 12: 49. (ஈ) “நாண்முதற் பாசந் தட்ப” (உ) “நாண்சுமக் கலாத நங்கை” சீவக. 470, 2443. (ஊ) “ஏண்பாலோவா நாண்.......................தம், பூண்பாலாகக் காண்பவர் நல்லார்” கம்ப. கைகேயி. 39. 3. “யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார், யாம்பட்ட தாம்படா வாறு” குறள். 1140. 4. (அ) “புணர்வும் பிரிவு, நன்பக லமையமு மிரவும் போல, வேறுவேறியல வாகி மாறெதிர்ந், துளவென வுணர்ந்தனை யாயின்” என்பது ஒப்புநோக்கற்பாலது; அகம். 327 : 1 - 4. 5. “உவக்காணெங் காதலர்” என்பதன் உரையில் (குறள். 1185) 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகலிரவுகளின் செலவும் வரவும்போல் வதறிந்து வைத்து அறியாதாய் போல நீ சொல்லுகின்ற தென்னை யென்பதாம்' என்று பரிமேலழகர் எழுதியிருப்பது ஈண்டறிதற்பாலது. (பிரதிபேதம்)1அல்லாந்தாள், 2மிகா அது தோள் சேர்ந்தமர்ந்தார்த்துயர், 3வல்வந்தளித்தலும், 4வரும் தாழ்பு எ - து: மக்கள், 5தழைக்கின்ற.
|