பக்கம் எண் :

922கலித்தொகை

டுயிர்ப்புக் கொள்ளும்; அவனோடு கூடுமாற்றினைச் சிலரோடுசாவும்; நெஞ்சு 1சுழலும்: பெய்கின்ற மழையைச் சேர்ந்த மதிபோலே தன்முகந் தோன்றும் படியாகக் கயலையொக்குந் தன்கண்களினின்றும் 2அரித்துவிழுகின்ற நீர் முகத்தே வடியும்படி ஒழியாளாய் அழாநிற்கும்; அவனை மறந்தாளைப்போலே ஆரவாரித்து இடையே நகுவதுஞ் செய்யும்; ஆகையினாலே தனக்குச் சிறந்த தன் (1) நாணையும் 3மற்றுமுள்ளநன்மைக்குணங்களையும் நிலைபெற நினையாதே காம மொன்றையுமே (2) நினைத்தவள் அலமந்தாளென்று இங்ஙனம் இகழ்ந்து கூறி, எல்லாருங்காணஎன்னைச்சிரியாதேகொள்ளும்; (3) ஐயறிவினை யுடையவர்களே! சுருங்க யான் அதன்றன்மை கூறுவேன்; கேண்மினென்று கூறுகின்றவள், மகளிர் தோளைச்சேர்ந்த ஆடவர் அவர்கள்வருத்தம்மிகும்படி பிரிதலும் பின்னர் நீண்ட சுரத்தைப்போனவர்கள் விரையவந்து அருள்செய் தலுமாகிய இரண்டும் இரவும் பகலும் போலே முறைமைசெய்து வேறாய் ஒருவரை ஒருவர் விரும்புவாரிடத்துத் தோன்றும்; இன்பம் நிலையில்லாமையான தடுமாற்றமாயிருக்குமது தனக்கேயன்றி உலகத்துக்கூடியிருந்து வாழ்வார்களுக் கெல்லாம் வருவதுஞ் செய்யுமென்று 4அதன்றன்மை கூறினாள். எ - று. 


1. “நாணுவரை நில்லாக் காமம்” அகம். 208 : 20.

2. முனைதலென்பதற்கு நினைதலென்னும் பொருள் வேறெங்கும் காணப்படவில்லை.

3. (அ) “ மாவு மாக்களு மையறி வினவே” (ஆ) “ மக்க டாமே யாறறி வுயிரே” தொல். மரபு. சூ. 32, 33. 
(இ) ”அவமதிப்பு மான்ற மதிப்பு மிரண்டு, மிகைமக்க ளான் மதிக்கற் பால-நயமுணராக், கையறியாமாக்க ளிழிப்பு மெடுத்தேத்தும், வையார் வடித்தநூ லார்” நாலடி. 163. (ஈ) “செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்” (குறள். 420.) என்பவைகளும் (உ) “தவஞ்செய் மாக்க டம்முடம் பிடாஅ, ததன்பய மெய்திய வளவை மான” (பொருந. 91. 92) என்புழி, மாக்களென்பதற்கு, ‘மக்களென்னாது மாக்களென்றார்; வீடு பேறு குறியாது செல்வத்தைக் குறித்தலின்’ என்றும் (ஊ) “பொழுது தளந் தறியும் பொய்யா மாக்கள்” (முல்லை. 55.) என்புழி மாக்களென்பதற்கு, அறிவில்லாதோர் என்றும் (எ) “மூவறு பாடை மாக்களால்” (சீவக. 93.) என்புழி, மாக்க ளென்பதற்கு, மிலேச்சராதலின் ஐயறிவிற் குரிய மாக்களென்னும் பெயராற் கூறினார்” என்றும் (ஏ) “மைய லங் கோயின் மாக்கள் (சீவக. 1278.) என்புழி, மாக்களென்பதற்கு, ‘மக்கட்குரிய மனனின்றி அறிவு கெட்டமையின், ஐயறிவுடையாரென்று மாக்களென்றார்’ என்றும் இவ்வுரையாசிரியர் எழுதியிருக்கும் விளக்கங்களும் (ஐ) “நடவாமடிசீ” என்னுஞ் சூத்திரத்தின் விசேடவுரையில் ‘கையறியா மாக்கட்கன்றி நூலியற்றும் அறிவினையுடைய

(பிரதிபேதம்)1உழலும், 2மறித்து, 3மற்றுள்ன, 4அதனது தன்மை கூறினாள் துறந்து.