பக்கம் எண் :

926கலித்தொகை

யான்வேண் டொருவனென் னல்ல லுறீஇயான்
றான்வேண்டு பவரோடு துஞ்சுங்கொ றுஞ்சாது 
வானு நிலனுந் திசையுந் 1துழாவுமென்
னானாப் படர்மிக்க நெஞ்ச


(ஒ) "வள்ளிதழ் நெய்தல் கூம்ப ............................புலம்பொடு வந்த புன்கண் மாலை’’ (ஓ) "நெய்தல் கூம்ப நிழல்குணக் கொழுக’’ நற். 117 : 3 - 7; 187 : 1. (ஒள) "தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற், கடும்பகல் வருதி கையறு மாலை, கொடுங்கழி நெய்தலுங் கூம்பக், காலை வரினுங் களைஞரோ விலரே’’ ஐங். 183. (ஃ) "நெய்த, னுண்டா துண்டு வண்டினந் துறப்ப,...................வந்தமாலை’’ அகம். 360 : 4 - 9. 
(அஅ) "புன்கண்கூர் மாலைப் புலம்புமென் கண்ணே போற், றுன்ப முழவாய் துயிலப் பெறுதியா, லின்கள்வாய் நெய்தானீ யெய்துங் கனவினுள், வன்கணார் கானல் வரக்கண் டறிதியோ’’ சிலப். 7 : 33. (ஆஆ)"நெடுங்கா னெய்த, லம்பகை நெறித்தழை யணி பெறத்தை இ’’ நற். 96 : 7 - 8. (இஇ) நெய்தற், பூவுட னெறிதரூஉத் தொடலை தைஇ’’ நற். 138 : 6-7. (ஈஈ) "நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையா, ருடலகங் கொள்வோ ரின்மையிற், றொட்டலைக் குற்ற சிலபூ வினரே’’ ஐங். 187. (உஉ) "நெய்த, னெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்’’ குறுந். 401. (ஊஊ) "ஒண்ணுதன் மகளிர்..............................நெய்த, லகல்வரிச் சிறுமனை யணியுந் துறைவ’’ நற். 283: 1 - 3. (எஎ) "மணிக்கலத் தன்ன மாயிதழ் நெய்தற், பாசடைப் பனிக்கழி’’ பதிற். 30 : 2 - 3. (ஏஏ) "மணிநிற நெய்தல்’’ ஐந்திணை யெழு. 60. (ஐஐ) "கண்ணே ரொப்பின் கமழ்நறு நெய்தல்’’ நற். 283 : 2. என்பவற்றால் அறியலாகும். பிங்கல முதலிய நிகண்டுகளையும் உரைகளையும் நோக்க, கருநெய்தலும் நீலமும் ஒன்றே வென்ற ஐயமுறுமாயினும், (ஒஒ) "கட்கமழு நறுநெய்தல், வள்ளித ழவிழ்நீலம்’’ மது. 250 - 251. (ஓஓ) "பல்லிதழ் நீலமொடு நெய்த னிகர்க்குந், தண்டுறை யூரன்’’ ஐங். 2. என்பவற்றால் இவை வேறுவேறென்பது விளக்கமாகும். இங்கே கூறிய ஐங்குறுநுற்றுச் செய்யுளின் விசேடவுரையில், 
(ஒளஒள) ‘சிறப்புடைய கருங் குவளையுடனே சிறப்பில்லாத நெய்தல் நிகர்க்கும் ஊரனென்றது, குலமகளிருடனே பொதுமகளிர் இகலுமூரன்’ என்று எழுதியிருப்பதும் உற்றுநோக்கற் பாலது (ஃஃ) "சிறுமா ணெய்தல்’’ புறம். 61 : 2. எனவருவதும் நோக்குக. (அஅஅ) "நீணறு நெய்தல்’’ குறிஞ்சி. 79. (ஆஆஆ) "தண்ணறு நெய்தற் றளையவிழ் வான்பூ’’ ஐங். 190. என வெண்ணெய்தலும் சிலவிடத்துக் கூறப்படுகிறது. வெண்ணெய்தலும் ஆம்பலும் ஒன்றாயின் அதுவும் பயின்று வருவதென்னலாம்.

(பிரதிபேதம்)1துழவு மென்.