எ - து. அங்ஙனம் ஞாயிற்றை நோக்கிக் கூறின அளவிலே மாலைக்கால முந் திங்களும் 1வந்தன; அவற்றான் வருத்தம்மிக்கு, என்னுடைய அமையாத வருத்தமிக்க நெஞ்சு முன்பே ஒள்ளிய வளை கழலும்படி என்னைக் கைவிட்டுப் பின்பு வருத்தஞ்செய்த கள்வளை உள்ளி என்னை ஒளித்துப்போய் அவன்பாற் பட்டது; அது தான் மீண்டுவந்து பெருங்கடல் தன்னிறந் தோன்றாமற் புற்கெனக் கானல் பறவைகள் முதலியனவின்றித் தனிப்பக் கழியின்நெய்தல் இகழ்குவிந்து தோன்ற வந்த 2மாலைப் பின்னர் விளங்குகின்ற வெண்ணிலாப் பார்க்கும் பொழுதின் கண்ணே விசும்பையும் நிலத்தையுந் திசைகளையும் அவனைத் தேடித் (1) துழாவாநிற்கும்; இங்ஙனம் என்னை அல்லலுறீஇயினவன், தான் விரும்பாமல் யான் விரும்பப்பட்டான் ஒருவன்; அவன் தன்னை விரும்புகின்ற என்னோடே துயிலாது தனியே துயில்கொள்ளுமோ கொள்ளானோ என்று கூறினாள். எ - று. வேண்டுபவர் என்றாள், தன்னைப் பிறர்போல. 45 | (2) ஊரவர்க் கெல்லாம் பெருநகை யாகியென் (3) னாருயி ரெஞ்சும னங்குநீ சென்றீ நிலவுமிழ் வான் 3றிங்கா ளாய்தொடி கொட்ப வளிபுற மாறி யருளான் றுறந்தவக் காதலன் செய்த கலக்குறுநோய்க் கேதிலர ரெல்லாருந் தேற்றார் மருந்து |
எ - து. அங்ஙனங் கூறி, எழுந்த திங்களை நோக்கி, நிலவைக் கான்ற திங்களே! தோள்மெலிந்தகாலத்துச் செருகாலமென்று ஆராய்ந்த தொடி உட்படச் சுழலும்படி அளித்தலை என்னிடத்து மாறி, பின்னர் என்னை 4அருள் செய்யாதே கைவிட்ட அக்காதலன் செய்த, மனக்கலக்கம் உறுகின்ற காம நோய்க்கு நின்னை ஒழிய அயலிலுள்ளார் எல்லாரும் [அதற்கு] ஒருமருந்தைத் தெளிவித்துக் கூறார்; ஆதலால் ஊரவர்க்கெல்லாம் பெரியதோ 5ரிகழ்ச்சி யுண்டாம்படி என் அரிய உயிர் போகாநிற்கும்; இதனை நோக்கித்
1. "கவிழ்ந்து, நிழறுழாம் யானை’’ தண்டி. சூ. 21; மேற்கோள்; "சிறு குரங்கின் கையாற் றுழா’’ பழ. 51. 2. "ஊர்க் கெல்லாஞ் சாலும், பெருநகை யல்க னிகழந்தது’’ கலி. 65. 1-2. 3. (அ) "ஆருயி ரெஞ்சும், வகையினால்’’ (ஆ) "ஆருயி ரெஞ்ச’’ கலி : 139 : 26 - 27; 143 : 11. (பிரதிபேதம்)1வந்தென அவற்றான், 2மாலைபின்னர், 3திங்களாய்தொடி, 4அருளே செய்யாதே, 5இகட்சி.
|