திங்களாய புத்தேளே! நீ (1) அவன்பாற் 1சென்று என் குறை முடிப்பாயாக என்று கூறினாள். எ - று. ஆகி, ஆக. 51 | வினைக்கொண்டென் காமநோய் நீக்கிய வூரீ ரெனைத்தானு 2மெள்ளினு மெள்ளலன் கேள்வ னினைப்பினுங் கண்ணுள்ளே தோன்று மனைத் தற்கே யேமரா தேமரா வாறு |
எ - து: அங்ஙனங் கூறிய திங்கள் போகா நிற்றலின் அதனைக் கைவிட்டு இன்னும் நம் வருத்தமுணர்ந்து வினவிய 3ஊரிலுள்ளாரே நம் வருத்தந் தீர்த்தற்குரியரென்று கருதி, ஊரீர்! நீர் என்னை இகழ்ந்திருக்கினும் என்கேள்வன் சிறிதும்என்னை இகழ்ந்திரான்; அதற்குக் காரணமென்னெனில், மெய்யுற்றுப்புணர்ந்து யான் பரிகாரப்படாததொரு நெறியிலே நின்று நெஞ்சால் நினைப்பிடத்துத்தோன்றுதலினுங் காட்டிற் 4கண்ணினிடத்தேதோன்றும்; அவ்வளவு அருள்செய்தற்கு என்னெஞ்சு தான் பரிகாரப்படுகின்றதில்லை; இதனை நும்முடையதோர் தொழிலாக ஏறட்டுக்கொண்டு எனது காம நோயை நீக்குதற்கு நல்ல 5காலமென்று கூறினாள் எ - று. 55 | கனையிருள் (2) வானங் கடன்முகந் தென்மே லுறையொடு நின்றீயல் வேண்டு மொருங்கே நிறைவளை கொட்பித்தான் செய்த துயரா லிறையிறை (3) பொத்திற்றுத் தீ |
எ - து: அங்ஙனங் கூறி அவனைத் தந்து 6இவர் இந்நோயை நீக்கு மளவும் செறிந்த இருளையுடைய மேகமே! நிறைந்த வளை சுழலப் பண்ணினவன் செய்த வருத்தத்தாலே எனக்குச் சந்து தொறுஞ் சந்துதொறும் காமத்தீமூண்டது; இதன் வெம்மை ஆறும்படி கடலிலே முகந்து என்மேலே சேர இடைவிடாமற்பெய்யுந் துளியோடே நிற்றலைச் செய்தல் 7வேண்டும்; என்று கூறினாள். எ - று.
1. ‘ஈங்கு முதலியன தன்மைக்கண்ணும் ஆங்கு முதலியன படர்க்கைக் கண்ணும் அடக்கப்பட்டன’ (தொல். கிளவி. சூ. 28. நச்) என்பது இங்கே அறிதற்பாலது. 2. "கார்தலைக் கொண்டு பொழியினுந் தீர்வது, போலாதென் மெய்க் கனலு நோய்’ கலி 146 : 44 - 45. 3. "எரிபொத்தி’’ (கலி. 34. 11) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. (பிரதிபேதம்)1சென்றேகுறை, 2எள்ளிலுமெள்ளிலன், 3ஊரிலுள்ளாரே அவனே நம் வகுத்தந் தீர்த்தற்குரியானென்று கருதினீர்? நீரென்னை, 4கண்ணிடத்தே, 5காரணமென்று, 6அவன் இந்நோயை, 7வேணுமென்று.
|