பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்929

59 எனப்பாடி

நோயுடை நெஞ்சத் தெறியா வினைபேங்கி
யாவிரு மெங்கேள்வற் காணீரோ வென்பவட்
கார்வுற்ற பூசற் கறம்போல வெய்தந்தார்
பாயல்கொண் டுள்ளா தவரை வரக்கண்டு
மாயவன் மார்பிற் 1றிருப் போல் பவள்சேர
(1) ஞாயிற்று முன்ன ரிருள்போல மாய்ந்ததென்
னாயிழை யுற்ற துயர் 

 

எ - து: 2என்று அங்கு அங்ஙனஞ்சொல்லிக் காமநோயையுடைய நெஞ்சிலே அடித்துக் கொண்டு வருந்தி அழுது, நீங்கள் எல்லீருந் தேடிச் சென்றும் எங்கணவரைக் காணப் பெற்றிலீரோ என்று கூறுகின்றவட்கு உற்ற வருத்த மானது, தன் துயிலைவாங்கிக்கொண்டு தன்னைநினையாதவரைத் தன்னிடத்தே வரக்கண்டு அவர் மார்பிடத்தே மாயவன் மார்பில் திருச்சேர்ந்தாற் போலே அவள்சேர ஞாயிற்றின்முன் இருள் கெடுமாறு போலக் கெட்டது; ஆதலால், இவ்வாயிழை பசப்புற்ற வருத்தத்திற் (கு அறக்) கடவுள் உதவித் தீர்த்தாற்போல அவரும் உதவித் தீர்த்தாரென்று கண்டார் வியந்து தம்மிற் கொண்டு கூறிற்றாக உரைக்க. எ - று.

இது கண்டார்க்கு அவராக்கங் கண்டு மருட்கை பிறந்தது.

‘நோய்வேது கொள்வது போலுங் கடும்பகல்’ என்னுந்துணையும் கூறத் தகாதன கூறலின் 3மடனிறந்தவாறும் ‘பனியொடு மாலைப்பகை தாங்கியான்’ எனத் தன் வருத்தந் தோன்றாமற் கூறலின் வருத்தமிறந்தவாறும் ‘கண்ணீர்க் கடலால்’ என்றதனையும் ‘வானுநிலனுந் திசையுந் துழாவுமென்..................னெஞ்சு' என்றதனையுந் தான் வியவாமையின் 4மருட்கையிறந்தவாறும் ‘எங்கண்பாயல் கொண்டு’ என்றும் ‘ஒள்வளையோட்’ என்றும் வனப்பு மிகுதி கூறலின் மிகுதி யிறந்தவாறுங் காண்க.

இஃது ஐஞ்சீரடிவந்த தரவும் ஐஞ்சீரடுக்கிய குறுவெண்பாட்டும் ஒரடியானொன்றும் பெற்றுக் கலிவெண்பாவின் வேறுபட்ட பாநிலைவகைக் கொச்சகம்.

(146). உரைசெல வுயர்ந்தோங்கிச் சேர்ந்தாரை யொருநிலையே
வரைநில்லா விழுமமுறீஇ நடுக்குரைத்துத் தெறன்மாலை
யரைசினு மன்பின்றாங் காமம் புரைதீர

1. "ஞாயிற்று முன்ன ரிருள்போல மாய்ந்ததென், னாயிழை மேனிப் பசப்பு’’ (கலி. 42: 31 - 32) என்பதும் அதன் குறிப்பும் ஒப்புநோக்கற்பாலன.

(பிரதிபேதம்)1திருப்போலவள்சேர, 2என்றங்ஙனம், 3மதனிறந்தவாறும், 4மருட்கை பிறந்தவாறும்.