பக்கம் எண் :

930கலித்தொகை

வன்னமென் சேக்கையு ளாரா தளித்தவன்
றுன்னி யகலத் துறந்த வணியளாய்
நாணு நிறையு முணர்கல்லா டோண்ஞெகிழ்பு
பேரம ருண்க ணிறைமல்க வந்நீர்தன்
கூரெயி றாடிக் குவிமுலைமேல் வார்தரத்
தேர்வழி நின்று தெருமரு மாயிழை
கூறுப கேளாமோ சென்று;
11 எல்லிழாய், ஏற்றி வரைந்தானை நாணு மறந்தாளென்
றுற்றனிர் போல வினவுதிர் மற்றிது
கேட்டீமி னெல்லீரும் வந்து; 
14 வறந்தெற மாற்றிய வானமும் போலு
நிறைந்தென்னை மாய்ப்யதோர் வெள்ளமும் போலுஞ்
சிறந்தவன் றூவற நீப்பப் பிறங்கிவந்
தென்மே னிலைஇய நோய்; 
18 நக்கு நலனு மிழந்தா ளிவளென்னுந்
தக்கவிர் போலு மிழந்திலேன் மன்னோ
மிக்கவென் னாணு நலனுமென் னுள்ளமு
மக்கா லவனுழை யாங்கே யொழிந்தன
வுக்கா ணிஃதோ வுடம்புயிர்க் கூற்றாகச்
செக்கரம் புள்ளித் திகிரி யலவனொடியா
னக்கது பன்மா ணினைந்து;
25 கரைகாணா நோயு ளழுந்தா தவனைப் 
புரைதவக் கூறிக் கொடுமை நுவல்வீர்
வரைபவ னென்னி னகலா னவனைத்
திரைதரு முந்நீர் வளாஅக மெல்லா
நிரைகதிர் ஞாயிற்றை நாடென்றேன் யானு
முரைகேட் புழியெல்லாஞ் செல்வேன் புரைதீர்ந்தான்
யாண்டொளிப் பான்கொல்லோ மற்று;
32  மருள் கூர் பிணைபோன் மயங்கவெந் நோய்செய்யு
மாலையும் வந்து மயங்கி யெரிநுதி
யாமந் தலைவந்தன் றாயி னதற்கென்னோய்
பாடுவேன் பல்லாருட் சென்று: