எ - து: அங்ஙனங்கூறி, அவன் அன்பிலனாதலை அறியாதே அவனோடே புணர்ந்து தன் அழகினையும் நாணினையும் உள்ளத்தினையும் இவள் இழந்தாள் என்னுந் தகுதிப்பாட்டினை யுடையீர்போலே இருந்தீர்; அவன் அன்பிலனல்லன்; அஃதென்னையெனில், அவன் 1இந்த உடம்பினின்று போகின்ற உயிர்க்கு உறுதியாம்படி, சிவந்தநிறத்தினையும் புள்ளிகளையுமுடைய தேருருள் போன்ற ஆண்பால் அலவன் பெண்பால் அலவனோடே நிகழ்த்து கின்ற பல மாட்சிமைகளையும் யான் நின்னிடத்தே நிகழ்த்தும்படி நின்னெஞ் சாலே நினைந்து அவை நிகழ்த்துகின்றவற்றையும் அவ்விடத்தே பாராய் என்றான்; அதனால், அவனன்புடைமை யறிந்தே யான் அவனோடு (1) 2நக்கது; அக்காலத்தே என்னாணும் என்னலமும் என்னுள்ளமும் புணர்ச்சியான் மிகுதி யைப் பெற்றன; அவை அவன் நீங்கிய அப்பொழுதே அவனிடத்தே நின்று விட்டன; 3ஆதலாற்றான் நோயும் மிகவுறும்; அவற்றை இகந்த தன்மையுடை யேனல்லேனென்று கூறினாள், எ - று. 25 | கரைகாணா நோயு ளழுந்தா தவனைப் புரைதவக் கூறிக் கொடுமை நுவல்வீர் வரைபவ 4னென்னி னகலா (2) னவனைத் திரைதரு 5முந்நீர் (3) வளாஅக மெல்லா நிரைகதிர் ஞாயிற்றை நாடென்றென் யானு முரைகேட் புழியெல்லாஞ் செல்வேன் புரைதீர்ந்தான் யாண்டொளிப் பான்கொல்லோ மற்று |
எ - து: அங்ஙனங் கூறி என்னைப்போல ஓர் எல்லைகாணாத காமநோயிலே மூழ்காதவனை உயர்ச்சி கெடும்படி அவன் பிரிந்து நாண்முதலிய வற்றைத் தாராத கொடுமையை நாடி அவன் வந்த 6காலத்தன்றே நீ இவை பெறுவது என்று கூறுகின்றவர்களே! யான் நிரைத்த கதிர்களையுடைய ஞாயிற்றை நோக்கித் திரையைத் தருகின்ற கடல்சூழ்ந்த உலகமெல்லாந் தேடி அவனைக் கொண்டு வா என்றுஞ் சொல்லிவிட்டேன்; அதுவேயன்றி யானும் அவன்
1. நக்கது - புணர்ந்தது; இச்சொல் இப்பொருளில் வருதல் (அ) “அவர் நக்கதன் பயனே” நக்குநலனுமிழந்தாள்” (கலி. 137 : 7; 146 : 18) என்பவற்றினுரையாலும் துணியலாகும். 2. “ஆங்கெதிர் நோக்குவன் ஞாயிறே யெங்கேள்வன், யாங்குள னாயினுங் காட்டீமோ” கலி. 147 : 27 - 28. 3. (அ) “தெண்கடல் வளாகம்” புறம். 189 : 1; (ஆ) “கொங்கை முன்றிற் குங்கும வளாகத்து” சிலப். 8 : 21; (இ) “நாமநீர் வரைப்பினானில வளாகமும்” சிதம்பர மும்மணிக். 1: 2. (பிரதிபேதம்) 1 உடம்பினின்றும் போகின்ற, 2 நக்கயக்காலத்தே, 3ஆதலாலதனோவும், 4என்னிலகலான், 5முன்னீர்வளாகமெல்லா, 6காலத்ததன்றோ
|