பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்935

இவ்விடத்தான் என்னும் வார்த்தை கேட்கலாம் இடமெல்லாஞ் சென்று தேடுவேன்; இங்ஙனந் தேடுமளவின் உயர்ச்சிதீர்ந்தவன் பின்னை எவ்விடத்தே ஒளித்திருப்பான்? அவனை அகப்படுத்திக் கொண்டு அந்நாண் முதலியன வாங்கியே விடுவேன்; என்னை நெஞ்சாலே வரைந்திருக்கின்றவன் என்னிடத்தி னின்றுநீங்கான்; என்றுங் கூறினாள். எ - று.

கொல்லும் ஓவும், அசை.

32 மருள்கூர் பிணைபோன் மயங்கவெந் நோய்செய்யு
மாலையும் வந்து மயங்கி யெரிநுதி
யாமந் தலைவந்தன் றாயி னதற்கென்னோய் 
பாடுவேன் பல்லாருட் சென்று
36யானுற்ற 1வெவ்வ முரைப்பிற் (1) பலர்த்துயிற்றும்
யாமநீ துஞ்சலை மன் 

எ - து: அங்ஙனங் 2கூறிய அளவிலே மாலையும் இரவும் வருகின்ற தனை உணர்ந்து, மயக்கமிக்க மான்பிணைபோல யான் மயங்கும்படி வெவ்விய காம நோயை உண்டாக்கும் மாலைக் காலமும் 3வந்து அதனோடே மயங்கி எரியின் கொழுந்துபோற் கொடிய இராக்காலமும் 4அவ்விடத்தே வந்ததாயின், அதனிடத்தே யான் பட்ட வருத்தத்தை என்னைப்போல வருந்தும் பலமகளிருக் குள்ளே சென்றுகூறுவேன்; நினக்கு முறைப்பட்டுக்கூறிற் பலரையுந் துயிலப் பண்ணும் இராக்காலமே! நீ தானும் மிகவும் வருந்தித் 5துயில் கொள்ளாய்; ஆதலால் என்னோயை நினக்குச் சொல்லேனென்றே னென்னும் கொடுமை நுவல்கின்றவர்களை நோக்கிக் கூறினாள். எ - று.

38 எதிர்கொள்ளூ ஞாலந் 6துயிலாரா தாங்கண்
முதிர்பென்மேன் முற்றிய வெந்நோ யுரைப்பிற் 
கதிர்கண் மழுங்கி மதியு மதிர்வதுபோ
லோடிச் சுழல்வது மன்

எ - து: அங்ஙனங் கூறியபின்னர்த் திங்கள் வருத்துமென் றுணர்ந்து ஞாலத்தி 7லுள்ளாரால் அவ்விசும்பிடத்தே (2) பிறையான பருவத்தே எதிர் 


1. "மன்பதை யெல்லா மடிந்த விருங்கங்குல்” (கலி. 65 : 3) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க.

2. (அ) “தொழுதுகாண் பிறையிற் றோன்றி” (ஆ) “பலர் தொழச், செவ்வாய் வானத் தையெனத் தோன்றி, யின்னம் பிறந்தன்று பிறையே” குறுந். 178; 307. (இ) “அப்பிறை, பதினெண் கணனு

(பிரதிபேதம்)1எவ்வமுறைப்பின், 2கூறினவளவிலே, 3வந்தது; அதனோடே, 4இவ்விடத்தே வந்ததால் யான் தன்னிடத்தே பட்ட, 5துயில்கொள்ளாயென்று என்னோயைச் சொல்லுவேனென்றுங், 6துயிலாதார் தாங், 7உள்ளார் அவ்.