கொள்ளப்பட்டுப் பின்பு முதிர்ந்து யான் துயிலாராமல் என்மேல் வந்து வளைத்த மதியும் யானுற்ற வெவ்வியநோயை முறைப்பட்டுக்கூறின் தன்கதிர்கள் ஒளி மழுங்கி நடுங்குவதுபோலே ஓடி மிகவுஞ் சுழன்று திரியும்; ஆதலான் நுமக்கன்றி அதற்கும் என்னோயைக் கூறேனென்றும் கூறினாள். எ-று. 42 | பேரூர் மறுகிற் பெருந்துயிற் சான்றீரே நீரைச் (1) செறுத்து நிறைவுற வோம்புமின் (2) கார்தலைக் கொண்டு பொழியினுந் தீர்வது போலாதென் மெய்க்கனலு நோய் |
எ - து: அங்ஙனங் கூறி, பெரிய ஊரில் தெருவிலே யான் உறுகின்ற வருத்தத்திற்குப் பரிகாரஞ் செய்யாமற் பெரிய உறக்கத்தைக் கொள்ளக் கருதிய சான்றீரே! என்மெய்க்கண் நின்று எரியுங் காமநோய் மழையெல்லாம் என்னி டத்தே நின்று பெய்யினும் ஆறுவது 1போல இருக்கின்றதில்லை; இது தணியும் படி உலகத்துள்ள நீரை என்னிடத்தே நிறையும்படி அடைத்து வைத்து என்னு யிரைப் பாதுகாப்பீராக என்றும் கூறினாள். எ - று. 46 | இருப்பினு நெஞ்சங் கனலுஞ் செலினே வருத்துறும் யாக்கை வருந்துத லாற்றே (3) னருப்ப முடைத்தென்னு ளெவ்வம் பொருத்திப் பொறிசெய் புனைபாவை போல வறிதுயங்கிச் செல்வேன் விழும் முழந்து |
மேத்தவும் படுமே” புறம். 1 : 9 - 10. (ஈ) “ஒள்ளிழை மகளி ருயர்பிறை தொழூஉம், புல்லென் மாலை” அகம். 239 : 9 - 10. 1. “செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார்” நாலடி. 222. 2. “கனையிருள் வானங் கடன்முகந் தென்மே, லுறையொடு நின்றீயல் வேண்டு மொருங்கே, நிறைவளை கொட்பித்தான் செய்த துயரா, லிறையிறை பொத்திற்றுத் தீ” கலி. 145 : 55 - 58. 3. அருப்பம் - அருமை; இது பண்பாகு பெயராய் அரிய அரணை உணர்த்திற்று; இது (அ) “வேட்டுப் புழை யருப்ப மாட்டி” முல்லை. 26. (ஆ) “அம்புமி ழயிலருப்பம்” மது. 67. (இ) “அரசுநிலை தளர்க்கு மருப்பமு முடைய” மலை. 378. (ஈ) “வீங்கு சிறை வியலருப்பம்” (உ) “அருப்பம் பேணா தமர்கடந்ததூஉம்” புறம். 17 : 28; 224 : 1. என்புழியும் இப்பொருளில் வருதல் காண்க. இச்சொல்லை, திட்பம், ஒட்பம், நுட்பம், செப்பம், வெப்பம், தறுகட்பம் என்பவற்றொடு ஒப்பு நோக்குக. அருப்பம், திண்மை யென்பாருமுளர். (பிரதிபேதம்)1போலே.
|