பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்937

எ - து: அங்ஙனங் கூறிப் பின்னர்த் தன் னோயின் செய்தி கூறுகின்றவள், அவன் என்னெஞ்சிடத்தே விடாமலிருப்பினும் அதனால் அமையாது தான் காந்தா நிற்கும்; அவன் ஒருகாற்போகின் தான் அதற்கு வருத்தமுறாநிற்கும்; 1அங்ஙனம் என்னெஞ்சு 2வருந்துதலை ஆற்றேனாய்ப் (1) பலவுறுப்புக்களையுங் கூட்டி இயங்குவதோர் பொறியாகச் செய்த புனைந்த பாவைபோல, இடும்பையிலே அழுந்தி மயங்கிய யாக்கையோடே 3சிறிதுசெல்வேன்; அதனால் தணியாத என்னிடத்து உண்டாகிய எவ்வமானது பிறரால் அழித்தற்கு அரிய அரணின் றன்மையையுடைத்து; இவ்வரணை அழிக்க லாவதோர் உபாயம் நாடுவீராக; என்றும் கூறினாள். எ - று.

51 

எனவாங்குப் பாட வருளுற்று
வறங்கூர் வானத்து (2) வள்ளுறைக் 4கலமரும்


1. “பல்கிழி யும்பயி னுந்துகி னூலொடு, நல்லரக் கும்மெழு குந்நலஞ் சான்றன, வல்லன வும்மைத் தாங்கெழு நாளிடைச், செல்வதொர் மாமயில் செய்தன னன்றே” என்பது நோக்குக; சீவக. 235.

2. வானம்பாடியின் இயல்பை (அ) “துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள்ளிற்றன், னளிநசைஇ யார்வுற்ற வன்பினேன் யானாக” (கலி.46 : 20 - 21) என்பதனாலும் (ஆ) அதன் குறிப்பாலும் (இ) “வானம்பாடி வறங்களைந் தானா, தழிதுளி தலைஇய புறவில்” ஐங். 418. (ஈ) “பொறிவரி, வானம் வாழ்த்தி பாடவு மருளா, துறை துறந் தெழிலி நீங்கலின்” அகம். 67 : 1 - 3. (உ) “நீரிடும்பை, புள்ளினு ளோங்க லறியும்” நான்மணி. 96. (ஊ) “துளியுண் பறவைபோற் செவ்வனோர்ப் பாரும்” பழ. 287; (எ) “தற்பாடு பறவை பசிப்பப் பசையற, நீர்சூல் கொள்ளாது மாறிக் கால்பொரச், சீரை வெண்டலைச் சிறுபுன் கொண்மூ, மழைகா லூன்றா................கொடுங்கோல் வேந்தன் காக்கு நாடே” ஆசிரியமாலை. (ஏ) “சாதக முரல் குரல் வாய்மடை திறப்ப..............எழுந்தகார்” கல். 98 : 17 - 30. (ஐ) “வானத்தின் றுள்ளி யல்லால் வருந்தினும் விரும்பல் செல்லா, மானத்தை யுடைய புள்ளின்” மேரு. 121. (ஒ) “கொண்டல்பே ரொலியினாற், றாவிலா மகிழ் வுறுஞ் சாதகத் தன்மையாய்” (ஓ) “கொண்டல் கண்டிடு சாதகம் போலுளங் குளிர்ந்தார்” கந்த. திருவவதார 30; அக்கினிமுகா, 224. (ஒள) “துன்னிய சாத கம்போற் சூழ்ந்துநோக் குநர்கட் கெல்லாங், கன்னியந் துழாய்மி லைந்த கருமுகில் கடைக்க ணோக்கான், மன்னிய கருணை வெள்ள மழைநனி வழங்கு மென்பார்” பாகவதம். (1) கண்ணபிரான் றுவரை. 30. (ஃ) ”மழையை நோக்கிய, சாதக மெனத்தரை யாளு மன்னவன், போதன தடிமலர் புந்தி நாடுபு, காதலிற் பூசையுங் கண்டு வந்தனன்”

(பிரதிபேதம்)1இங்ஙனம், 2வருத்துதலை, 3சிறிதே நிற்பேன், 4அலம்வரும்.