12 | இவர்யாவ ரேமுற்றார் கண்டீரே யோஒ வமையுந் தவறிலீர் மற்கொலோ நகையின் மிக்கதன் காமமு மொன்றென்ப வம்மா புதுநலம் பூவாடி யற்றுத்தாம் வீழ்வார் மதிமருள நீத்தக் கடை; |
17 | என்னையே மூசிக் கதுமென நோக்கன்மின் வந்து; |
18 | கலைஇய கண்புருவந் தோணுசுப் பேஎர் சிலமழைபோ றாழ்ந்திருண்ட கூந்த லவற்றை விலைவள மாற வறியா தொருவன் வலையகப் பட்டதென் னெஞ்சு; |
22 | வாழிய கேளிர்; |
23 | பலவுஞ்சூ டேற்றித் தெளித்தவ னென்னை முலையிடை வாங்கி முயங்கின னீத்த கொலைவனைக் காணேன்கொல் யான்; |
26 | காணினு மென்னை யறிதிர் கதிர்பற்றி யாங்கெதிர் நோக்குவன் ஞாயிறே யெங்கேள்வன் யாங்குள னாயினுங் காட்டீமோ காட்டாயேல் வானத் தெவன்செய்தி நீ; |
30 | ஆரிரு ணீக்கும் விசும்பின் மதிபோல நீருள்ளுந் தோன்றுதி ஞாயிறே யவ்வழித் தேரை தினப்பட லோம்பு; |
33 | நல்கா வொருவனை நாடியான் கொள்வனைப் பல்கதிர் சாம்பிப் பகலொழியப் பட்டீமோ செல்கதிர் ஞாயிறே நீ; |
36 | அறாஅ லின்றரி முன்கைக் கொட்கும் பறாஅப் பருந்தின்கட் பற்றிப் புணர்ந்தான் கறாஅ வெருமைய காடிறந்தான் கொல்லோ வுறாஅத் தகைசெய்திவ் வூருள்ளான் கொல்லோ செறாஅ துளனாயிற் கொள்வே னவனைப் பெறாஅதியா னோவே னவனையெற் காட்டிச் சுறாஅக் கொடியான் கொடுமையை நீயு முறாஅ வரைசநின் னோலைக்கட் கொண்டீ |