பக்கம் எண் :

940கலித்தொகை

மறாஅ வரைசநின் மாலையும் வந்தன்
றறாஅ தணிகவிந் நோய்; 
46 தன்னெஞ் சொருவற் கினைவித்தல் யாவர்க்கு
மன்னவோ காமநின் னம்பு; 
48 கையாறு செய்தானைக் காணிற் கலுழ்கண்ணாற் 
பையென நோக்குவேன் றாழ்தானை பற்றுவே
னையங்கொண் டென்னை யறியான் விடுவானே
லொய்யெனப் பூச லிடுவேன்மன் யானவனை
மெய்யாகக் கள்வனோ வென்று;
53 வினவன்மி னூரவி ரென்னையெஞ் ஞான்று
மடாஅ நறவுண்டார் போல மருள்
விடாஅ துயிரொடு கூடிற்றென் னுண்கண்
படாஅமை செய்தான் றொடர்பு;
57 கனவினாற் காணிய கண்படா வாயி
னனவினான் ஞாயிறே காட்டாய்நீ யாயிற்
பனையீன்ற மாவூர்ந் தவன்வரக் காமன்
கணையிரப்பேன் கால்புல்லிக் கொண்டு;
எனவாங்கு;
62 கண்ணினைபு கலுழ்பேங்கின
டோண்ஞெகிழ்பு வளைநெகிழ்ந்தன
ளன்னையோ வெல்லீருங் காண்மின் மடவரன்
மென்னடைப் பேடை துனைதரத் தற்சேர்ந்த
வன்னவான் சேவற் புணர்ச்சிபோ லொண்ணுதல்
காதலன் மன்ற வவனை வரக்கண்டாங்
காழ்துயர மெல்லா மறந்தனள் பேதை
நகையொழிந்து நாணுமெய் நிற்ப விறைஞ்சித்
தகையாகத் தையலாள் சேர்ந்தா ணகையாக
நல்லெழின் மார்ப னகத்து.

(1) இதுவுமது. இதற்கும் (2) முன்னங் கூறிய உரையைக் கூறிக்கொள்க.

இதன் பொருள்


1. இச்செய்யுளும் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமாகிய பெருந்திணைக்கு மேற்கோள்; தொல். அகத். சூ. 13. நச்.

2. இந்நூற்பக்கம் 885 - 886. பார்க்க.