பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்941

ஆறல்ல மொழி 1தோற்றி யறவினை கலக்கிய
தேறுக ணறவுண்டார் மயக்கம்போற் காமம்
வேறொரு 2பாற்றானது கொல்லோ சீறடிச்
சிலம்பார்ப்ப வியலியா ளிவண்மன்னோ வினிமன்னும்
புலம்பூரப் புல்லென்ற வனப்பினாள் விலங்காக
வேனுதி யுறநோக்கி வெயிலுற வுருகுந்தன்
(1) றோணல முண்டானைக் கொடுத்தாள்போற் 3றெருவிற்பட்
டூண்யாது மிலளாகி (2) யுயிரினுஞ் சிறந்ததன்
னாண்யாது மிலளாகி (3) நகுதலு நகூஉ மாங்கே
10 பெண்மையு மிலளாகி யழுதலு மழுஉந் தோழியோ
ரொண்ணுத லுற்ற துழைச்சென்று கேளாமோ
12 இவர்யாவ ரேமுற்றார் கண்டீரே யோஒ
வமையுந் தவறிலீர் மற்கொலோ நகையின்
மிக்கதன் காமமு மொன்றென்ப வம்மா
புதுநலம் பூவாடி யற்றுத்தாம் வீழ்வார்
மதிமருள நீத்தக் கடை
17 என்னையே மூசிக் (4) கதுமென நோக்கன்மின் வந்து

எ - து: தோழீ! அறநெறியல்லாத தீமொழிகளைத் தம்மிடத்தே தோற்று வித்து அறமாகிய தொழில்களைத் தம்மிடத்துத் தோன்றாமற் கலக்கவேண்டித் தெளியுங் (5) கள்ளையும் நறவையும் உண்டவர்களுடைய உலகியல் கெட்ட மயக்கம் போல (6) நன்மக்கள் ஆற்றுகின்ற காமம் உலகியல் தப்பி வேறோர்


1. “தோணல முண்டு துறக்கப் பட்டோர்” (கலி. 23 : 8) என்பதும் அதன் குறிப்பும் ஒப்பு நோக்குக.

2. (அ) "சிறந்ததன் னாணும்’’ (கலி. 145 : 10) என்பதும் (ஆ) அதன்குறிப்பும் (இ) "உயிரினுஞ் சிறந்த நாணு நனிமறந்து’’ நற். 17 : 8. என்பதும் ஈண்டு ஒப்பு நோக்கற் பாலன.

3. "உண்ணலு முண்ணேன்’’ (கலி. 23 : 7..)என்பதும் அதன் குறிப்பும் இங்கே அறிதற்பாலன்.

4. இந்நூற் பக்கம் 422 : 7-ஆம் குறிப்புப் பார்க்க.

5. "கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து, மெய்யறி யாமை கொளல்’’ குறள். 925.

6. "காமநீ ராழி, யடக்குமா றுள்ளத் தவன்’’ நள. சயம். 78.

(பிரதிபேதம்)1தேற்றி யறவினைக்கலக்கிய, 2பாலாற்றானது, 3தெருவுள்பட்டு.