பக்கம் எண் :

942கலித்தொகை

பகுதியாய் விட்டதோ? அதற்குக் காரணமென்னெனில் இப்போழுது மிகவும் தன் கணவனில்லாத தனிமைபரக்கையினாலே பொலிவழிந்த அழகினையுடையளாகிய இவள் வேனுதி செய்யுங் கொடுமையையுறும்படி எதிரேநோக்காதே விலங்கு தலுண்டாக நோக்குகையினாலே நெஞ்சுருகுங் கணவனைக் கெடுத்தாள் போலே தெருவிலே புறப்பட்டு வெயில் தன்மேலே உறும்படி தன் சிறிய அடியிற் சிலம்பு ஒலிப்ப எங்குந் திரிதரும் நிலைமையளாயினாள்; அதுவேயன்றி ஊண்சிறிது மிலளாய் மேனி மெலிந்து உயிரினுஞ் சிறந்த நாணும் சிறிதுமிலளாய் நகுதலை யுஞ் செய்யாநிற்கும்; அப்பொழுதே பெண்டன்மையுமிலளாய் அழுதலையுஞ் செய்யா நிற்கும்; இதனை நெஞ்சாலே ஓர்ந்துபார்; அங்ஙனம் ஓர்ந்து பார்த்து இவளுற்ற வருத்தத்தை யாம் இவ்விடத்தே சென்று கேளாமோ? கேட்போம் என்று கூறி மொய்த்துக் கடுகவந்து என்னைப் (1) பாராதே கொள்ளுங்கோள்; நுமக்கு முன்னே வந்து என்னைச் சூழ்ந்துநின்ற இவரைக் கண்டீரே; ஒஒ! இவரே சூழ்ந்துநிற்க அமையும்; நீர்தாம் இதற்கு முன்பு 1மிகவும் யானுற்றதவறு டையீரல்லீர்போலேயிருந்தது, நுமக்கும் ஒருகாலத்தே உண்டாம்; இனி யான் கூறுவதனைக் கேட்பீராக; தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறமும் ஒருகாமம் என்று (2) நூல்களிலே கூறுவர்கள்; ஆதலால் அதனையுற்றுநின்ற என்னை இகழாதே கொள்ளுங்கோள்; ஈண்டு ஏமுற்றாரியார் யாரீதேமுற்றதென்று தாம் விரும்பப்பட்ட ஆடவர் தம்மதி மயங்கும்படி கைவிட்டவிடத்து அவர்பெற்ற நலங் கெடுகின்ற தன்மை (3) பூ வண்டு நுகர்ந்து தன் புதிய நலம் சிறிது கெட்ட நிலைமைத்து; காணுங்கோளென்று கூறினாள். எ - று.

(4) நறவு, தேனாற் 2சமைத்தமைத்தது. ஆற்றுதல் - நடத்துதல்.

நோக்கி என்ற எச்சம், காரண காரியப்பொருட்டு. தோள் நலத்தைப் 3புணர்ந்தவன், ஒருபெயர் மாத்திரையாய் நின்றது. இவரை என்னும் இரண்டாவது. 4 "ஒழியாது வருதலும்’’ (5) என்பதனான் ஒழிந்தும் நின்றது. ஒஒ, இரக்கக் குறிப்பு.


1. "புறப்பற்றுத், தள்ளுங்கோ ளூரரவிற் றாமோ தரன்பள்ளி, கொள்ளுங்கோ ளூர்மருவுங் கோள்’’ நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி. 58.

2. "தேறுத லொழிந்த காமத்து மிகுதிற, மிக்க காமத்து மிடலொடு தொகை இச், செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே’’ தொல். அகத். சூ. 51. 

3. இந்நூற்பக்கம், 234 : 4-ஆம் குறிப்பில் இவ்விடத்துக்குப் பொருந்து பவை ஒப்பு நோக்கற்பாலன.

4. நறவென்பது கள்ளின் பொதுப் பெயராயும் வரும்.

5. தொல். தொகைமரபு. சூ. 15.

(பிரதிபேதம்)1மிகவுமயரினுற்ற, 2சமைத்தது, 3நுகர்ந்தவன் ஒரு, 4ஒழியாதென்பதனால்.