53 | வினவன்மி 1னூரவி ரென்னையெஞ் ஞான்று மடா அ (1) நறவுண்டார் போல மருள விடாஅ துயிரொடு கூடிற்றென் னுண்கண் படாஅமை செய்தான் றொடர்பு |
எ - து: அங்ஙனங் கூறி, ஊரிலுள்ளீர்! எங்களைநோக்கிக் கூறுகின்ற நீர் ஞாயிற்றையுங் காமனையும் நோக்கிக் கூறியதற்கு அவை என்செய்யுமென்று என்னைக் கேளன்மின்; எந்நாளும் என்கண் துயிலாமையைச் செய்தவன் தந்த நட்பின் உண்டான நோய் மடாநறவை யுண்டாரைப்போல மயங்கும்படி விடாதே உயிரைப்பொருந்துந் தன்மையோடே கூடிவிட்டது; இனி இவ்வுயிரைக் 2காக்கும் வழி உண்டாயிற் காப்பீராக என்றுங் கூறினாள். எ - று. 57 | (2) கனவினாற் காணிய 3கண்படா வாயி னனவினான் ஞாயிறே காட்டாய்நீ யாயிற் (3) பனையீன்ற மாவூர்ந் தவன்வரக் காமன் கணையிரப்பேன் கால்புல்லிக் கொண்டு |
எ - து: அதற்கு அவர் மறுமொழி கொடாதுநிற்றலின், முற்கூறிய ஞாயிற்றையுங் காமனையுமே பின்னும் நினைந்து, வருகின்ற இராக்காலத்துக் கனவின்கண்ணே அவனைக் கண்டு ஆற்றுதற்குக் காமன்கணை செய்கின்ற கொடுமையாலே கண் துயிலாவாயின், 4ஞாயிறே! (4) எப்பொருளையுங் காட்டு கின்ற நீ நனவின்கண் வந்தாகிலும் அவனைக் காட்டாயாயில், இவ்வாறே வருத்த முற்றுப் பனையீன்ற குதிரையையேறி (5) அவன் என்பால் தானே வரும்படியாக அக்காமன்காலைக் கட்டிக்கொண்டு நின் அம்புகளை எனக்குத் தர 5வேண்டு மென்று காமனை இன்னும் இரந்துகொள்வேன்; என்றும் 6கூறினாள். எ - று.
1. "நறவுண்டார் மயக்கம் போல்’’ கலி. 147 : 2. 2. (அ) "கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க், குயலுண்மை சாற்றுவேன் மன்’’ (ஆ) "நனவினா னல்கா தவரைக் கனவினாற், காண்டலி னுண்டென் னுயிர்’’ (இ) "நனவென வொன்றில்லை யாயிற் கனவினாற், காதலர் நீங்கலர் மன்’’ குறள். 1212, 1213, 1216. 3. "பனையீன்ற மாவும்’’ கலி. 138 : 12. 4. "கண்பயங் கெடப் பெயர’’ (கலி. 148 : 3) என்பதும் அதன் குறிப்பும் பாாக்க. 5. "சொற், றோற்று வந்தென் சிலம்படி கைதொழ, நோற்பன்’’ சீவக. 899. (பிரதிபேதம்)1ஊரீரென்னை, 2காக்கலாம் வழி, 3கண்படாயாயின், 4ஞாயிறே! நீ வந்தாலும் எப்பொருளையுங் காட்டுகின்ற நீ நனவின்கண் அவனைக், 5வேண்டுமென்று, 6கூறினாள் ஆங்கசை.
|