எனவாங்கு எ - து: எனச்சொல்லி. எ - று. ஆங்கு, அசை. 62 | கண்ணினைபு 1கலுழ்பேங்கின டோண்ஞெகிழ்பு வளைநெகிழ்ந்தன ளன்னையோ வெல்லீருங் காண்மின் மடவரன் மென்னடைப் (1) பேடை 2துனைதரத் தற்சேர்ந்த வன்னவான் சேவற் புணர்ச்சிபோ லொண்ணுதல் காதலன் மன்ற வவனை வரக்கண்டாங் காழ்துயர மெல்லா மறந்தனள் பேதை நகையொழிந்து நாணுமெய் நிற்ப விறைஞ்சித் தகையாகத் தையலாள் சேர்ந்தா ணகையாக நல்லெழின் மார்ப னகத்து. |
3எ - து: இவ்வொண்ணுதல் (2) அன்னையோ!! என்று இனைந்து கண் கலங்கி அழுதாள்; தோண்மெலிந்து வளைநெகிழ்ந்தாள்; இப்பேதை, மடப்பம் வருதலினையும் மெல்லிய நடையினையுமுடைய அன்னப்பெடை விரைந்து செல்ல, அதனைச்சேர்ந்த அன்னச்சேவலின் கூட்டம்போலே, பின் தன் காதலன்வர 4அங்கே அவனைக்கண்டு தான் அழுந்தின துயரமெல்லாம் அறுதியாக 5மறந்தாள்; மறந்து, இத்தையலாள் பின்னர் ஊரிலுள்ளார்
1. (அ) "அன்னத் தன்ன மென்னடை யன்னத்துப், புணர்வி னன்ன தண்டாக் காதல்’’ பெருங். (4) 11 : 80 - 81. (ஆ) "ஆதரம் பெருகுகின்ற வன்பினா லன்ன மொத்தும்’’ சீவக. 189. (இ) "தூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென, வாவிவா யிளவன மயங்கு மென்பவே’’ சூளா. நகர. 11. (ஈ) "தானுயி ருறத்தனி தழுவும் பேடையை, யூனுயிர் பிரிந்தெனப் பிரிந்த வோதிமம்" கம்ப. பம்பை. 15. (உ) "அஞ்சியோடின ரன்னமுஞ் சேவலு மென்ன’’ பிரமோத்தா. உருத்திராக்க. 42. 2. ‘அன்னையோ’ என்பது ஈண்டு வருத்தத்தைக் காட்டி வந்ததோர் இடைச் சொல்; (அ) "அம்மனை யோவென் றஞ்சிப், பனிக்குநுண் ணுசுப்பிற் பாவை’’ (ஆ) "அம்மனை யோவெனாத், துண்ணெ னெஞ்சின ளாய்’’ சீவக. 745, 760. என்புழி, ‘அம்மனையோ’ என வருதலுங் காண்க, இஃது அச்சங் காட்டி வந்ததென்றலுமாம். (பிரதிபேதம்)1கவிழ்பு, 2துணைதரத், 3எ - து : எனச்சொல்லி இவ்வொண்ணுதல், 4ஆங்கே, 5முன்னர் மறந்தாள்.
|