பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்951

வில்லவ ரொழுக்கம்போ (1) லிருங்கழி மலர்கூம்பச் 
(2) செல்லுமென் னுயிர்ப்புறத் 1திறுத்தந்த மருண்மாலை

எ - து: ஞாயிறு தன் கதிர்களாலே ஞாலத்திடத்துப் பழைய இயல்பினை யுடைத்தாய்த் தான் செய்துபோதும் பொருள்களை விளக்குந் தொழிலிலே ஊன்றி நடத்தி, பின்னர்க் காமன் தனக்கு யான் பிரிந்திருந்தாரை வருத்துதற்கு நீ போவா யாக என்று கூறியகாரியத்தினைத் தன்றலையிலே ஏறட்டுக் கொண்டுபோவான் போலே அத்தகிரியைச் சேர்ந்து, பல்லுயிரும் தங்கண்களாற் கொள்ளும் பயன் கெடும்படி போக, தீவினையைப் போக்குகின்றவனுடைய அருளைக் கொண்ட முகம்போலத் திங்கள் வளப்பத்தையுடைய கடலிற் றிரை மேலே தோன்றி அம் மயக்கத்தையுடைய இருளைப் போக்க, பொருளில்லா தார் நிகழ்த்தும் இல்லறம் போலக் கரிய கழியின் மலர்கள் ஒழுகக் குவிய, தேய்கின்ற என்னுயிரின் புறத்தே வந்துவிட்ட மாலாய்! நீ அறிவு மயங்கு தலையுடைய மாலையாய் இருந்தாய்; என்றுங் கூறினாள். எ - று.

8மாலை நீ

(3) இன்புற்றார்க் கிறைச்சியா யியைவதே செய்தாய்ம
னன்புற்றா ரழநீத்த வல்லலுட் கலங்கிய
2துன்புற்றார்த் துயர்செய்த றக்கதோ நினக்கு 

எ - து: அங்ஙனங் கூறியவள், அதற்குக் காரணமென்னெனின் கூடிஇன்ப முற்றவர்களுக்கு நேயமாய் அவர்கள் தம்மிற் கூடும் நிலைமையையோ மிகவும் முன்பு செய்துபோந்தாய்; இப்போழுது ஆடவர் தம்மேல் அன்புற்ற மகளிர் அழும்படி தம்மைக் கைவிட்டதனால் உண்டான அல்லலிடத்தே நின்று கலங்கிய துன்பமுற்ற மகளிரை வருத்தஞ் செய்தல் நினக்குத் தக்கதன்றே; என்றாள். எ-று.

மேல் வருகின்றவற்றிற்கும் இங்ஙனங் கூட்டி உரைக்க.


1. "இம்மாலை இருங்கழி மாமலர் கூம்ப’’ கலி. 130 : 11 - 12.

2. புறம் இடப்பொருளைக் காட்டிவரும் உருபாய் வருதற்கு, இவ்வடி மேற்கோள்; நன். பெயரி. சூ. 45. மயிலை. சங்கர. வி. இரா.

3. "மாலைநீ; தூவறத் துறந்தாரை நினைத்தலிற் கயம்பூத்த, போதுபோற் குவிந்தவென் னெழினல மெள்ளுவா, யாய்சிறை வண்டார்ப்பச் சினைப் பூப்போற் றளைவிட்ட, காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்’’ கலி. 118 : 9 - 12.

(பிரதிபேதம்)1இறுத்தமருள், 2துன்புற்றார் துயர்ச்செய்தல்.