12 | மாலைநீ | | கலந்தவர் காமத்தைக் 1கனற்றலோ செய்தாய்ம னலங்கொண்டு நல்காதார் நனிநீத்த புலம்பின்க ணலந்தவர்க் கணங்காத றக்கதோ நினக்கு; |
எ - து: மகளிரைக் கூடிய கணவருடைய மனவேட்கையை அம்மக ளிர்க்குத் துணையாய் நின்று அவர் மனத்தினின்று நீங்காது 2கனன் றெரியுந் தன்மையையோ முன்பு 3மிகவுஞ் செய்தாய்; இப்போழுது அம்மகளிர் 4நலத் தைக் கைக்கொண்டு பின்பு அவர்க்குக் கொடாத ஆடவராலே தந்நலம் போன தனிமையிடத்தே நின்று அலந்த மகளிர்க்குத் துணையாகாதே வருத்தமாகல் நினக் குத் தக்கதன்றே; என்றாள். எ - று. 16 | மாலைநீ | | எங்கேள்வற் (1) றருதலுந் தருகல்லாய் துணையல்லை பிரிந்தவர்க்கு நோயாகிப் புணர்ந்தவர்க்குப் புணையாகித் திருந்தாத செயினல்லா லில்லையோ நினக்கு |
எ - து: எம்முடைய கேள்வரை 5முன்புபோல மனத்தைக் கனலப் பண்ணி ஈண்டுத் தருதலுஞ் செய்திலை; ஆதலால் நீ எனக்குத் துணையல்லை; தான் பிரிந்திருந்த மகளிர்க்கு அப்பிரிவாற்றோன்றிய நோயின்வடிவு நீதானே யாய்க் கூடியவர்களுக்கு அவர் பெறும் இன்பத்திற்கோர் தெப்பமாய், இங்ஙனம் நன்மையாகாத காரியங்களைச் செய்தொழுகுமதல்லது நினக்கு நன்மையாகச் செய்யுங் காரியங்கள் இல்லையோ; என்றாள். எ - று. இது, கலக்கம் என்னும் மெய்ப்பாடு. 6எனவாங்கு எ - து: என்று சொல்லி. எ - று. ஆங்கு, அசை 21 | ஆயிழை மடவர லவல மகலப் பா (2) யிருட் பரப்பினைப் பகல்களைந் ததுபோலப் போயவர் (3) மண்வௌவி வந்தனர் சேயுறை காதலர் செய்வினை முடித்தே. |
1. "உண்ணலு முண்ணேன்’’ (கலி. 23 : 7) என்பதும் அதன் குறிப்பும் நோக்குக. 2. "ஞாயிற்று முன்ன ரிருள்போல் மாய்ந்தது’’ (கலி. 42 : 31) என்பதும் அதன் குறிப்பும் இங்கே அறிதற்பாலன. 3. "மண் வௌவி வருபவர்’’ கலி. 31 : 9. (பிரதிபேதம்)1கனறலோ, 2நின்றெரியும், 3மிகச் செய்தாய், 4நலத்தைக் கொண்டு, 5முன்பு போன் மனத்தை, 6எனவாங்கு ஆங்கசை.
|