13 | அனைத்தினிப் பெரும வதனிலை நினைத்துக்காண் சினைஇய வேந்த் னெயிற்புறத் திறுத்த வினைவரு பருவரல் போலத் துணைவரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே. |
இது வரைவு நீட்டித்துழித் தலைவியது ஆற்றாமை கூறித் தலைவனை வரைவு கடாயது. இதன் பொருள். நிரை (1) திமில் களிறாகத் (2) திரையொலி பறையாகக் கரைசேர் (3) புள்ளினத் தஞ்சிறை படையாக வரைசுகால் கிளர்ந்தன்ன (4) வுரவுநீர்ச் சேர்ப்பகேள் எ - து: நிரைத்த திமில்கள் களிறாகத் திரையொலிக்கின்ற ஓசை பறையாக இனத்தினையும் அழகிய சிறகினையுமுடைய கரையைச் சேர்ந்த புட்கள் காலாட் படையாகப் பாண்டியன் (5) பகைவர்மேற் படையெழுச்சியாய்ச் சென்றாலொத்த செலவினையுடைத்தாகிய வலியினையுடைய கடலைச் சேர்ந்த நிலத்தை யுடைய வனே! யான் கூறுகின்றதனைக் கேள். எ - று. (6) தான் பாதுகாக்கின்ற கரையை அரசனைப் போலே சென்று அழிக்கின்ற கடற்சேர்ப்பனென்றதனால், தான் பாதுகாக்கப் படுகின்ற நம்மை
1. இந்நூற்பக்கம் 822: 1. ஆம் குறிப்பு நோக்கற்பாலது. 2. "குணில்பொரக் குளிறின முரசம்.................முணையினாற் கடலக முழக்க மொத்தவே’’ சீவக. 2222. 3. "கம்புட் கோழியுங் கனைகுர னாரையுஞ், செங்கா லன்னமும் பைங்காற் கொக்குங், கானக் கோழியு நீர்நிறக் காக்கையு, முள்ளு மூரலும் புள்ளும் புதாவும், வெல்போர் வேந்தர் முனையிடம் போலப், பல்வேறு குழூஉக்குரல் பரந்த வோதையும்’’ சிலப். 10 : 114 - 119. 4. "உரவுநீர்ச்சேர்ப்ப’’ (கலி. 127 : 22) என்பதும் அதன்குறிப்பும் பார்க்க. 5. "முடிமன ரெழுதரு பருதி மொய்களி, றுடைதிரை மாக்கல மொளிறு வாட்படை, யடுதிற லெறிசுறா வாகக் காய்ந்தன, கடலிரண் டெதிர்ந்த தோர் கால மொத்ததே. "சீவக. 2223. 6. (அ) கலி. 125. தரவின்விசேடவுரையில், ‘தன்னாற் பாதுகாக்கப் படுகின்ற மணற்குன்றைத் தானே கரைத்தாற்போல நின்னாற் பாது காக்கப்படுந்தலைவியை நீதானே வருத்தாநின்றாய் என உள்ளுறையுவ மங்கொள்க’ என்றும் (ஆ) சீவக. 280 - ஆம் செய்யுளின் முன்குறிப்பில், ‘தனக்குவேலியாகிய கரையைக் கடல் தானே கொல்லுகின்றாற் போலத் தமக்குக்காவலாகிய அரசனைப் படை தாமே கொல்லுகின்ற தென்றார்’ என்றும் இவர் எழுதியருப்பவை ஈண்டு அறிதற் பாலன.
|