பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்955

வரைந்துகொண்டு பாதுகாவாமல் 1அழிக்கின்றானென உள்ளுறையுவமந் தந்தவாறுணர்க். இனிப் பகையின்றி இருக்கின்ற கடல் பகைபோற்றோன்றினாற் போல, அயலார் பகைபோல அலர் கூறி வருத்துகின்றாரென்றலும் ஒன்று.

(1) 2கற்பித்தா னெஞ்சழுங்கப் பகர்ந்துண்ணான் 3விச்சைக்கட்
டப்பித்தான் பொருளேபோற் றமியவே தேயுமா
(2) லொற்கத்து 4ளுதவியார்க் குதவாதான் மற்றவ
னெச்சத்து ளாயினு 5மஃதெறியாது விடாதேகாண் 

எ - து: தனக்கோர் வருத்தமுற்றவிடத்து உதவினவர்கட்கு ஓர் வருத்தம் வந்தால் உதவாதவன், தன்னை நூன்முதலிய கற்பித்த ஆசிரியன் தன்பால் ஒன்று பெறாமல் மனம்வருந்த, தன்கைப்பொருளை அக்கல்விப்பொருட்குக் கைம்மாறா கக் கொடுத்துஉண்ணானாய், தான்கற்ற விச்சையிடத்தே தப்புப் பண்ணிக் கொண்டவனுடைய கல்விப்பொருள் நாடோறுந் தேயுமாறுபோல, தானே தானாகத் தேயாநிற்பன்; அதுவேயன்றிப் பின்பு (3) அச்செய்நன்றிக் கேடாகிய அது தன்னுடம்பினை ஒழித்து உயிர்போனவிடத்தே யாயினும் நுகர்வியாமற் போகாது காண். எ - று.


1. "குரவர் தக்கிணை காத லோடு வழங்கிலார், தீப்ப வங்களும்’’ சேது. சங்கதீர்த்த. 20.

2. (அ) "செல்வத்துட்சேர்ந்தவர் வளனுண்டுமற்றவ, ரொல்கத்து நல்கிலாவுணர்விலார்’’ (ஆ) "முன்னொன்றுதமக்காற்றி முயன்றவரிறுதிக்கட், பின்னொன்று பெயர்த்தாற்றும் பீடுடையாளர்’’ (கலி. 25:19-20, 34:4-5) என்பவையும் அவற்றின்குறிப்புக்களும் இங்கு அறிதற்பாலன.

3. (அ) "நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன், செய்தி கொன்றோர்க்குய்தி யில்லென, வறம்பா டிற்றே’’ புறம். 34: 5-7. (ஆ) "நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல, தன்றே மறப்பது நன்று’’ (இ) "எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை, செய்ந்நன்றி கொன்ற மகற்கு’’ குறள். 108, 110. (ஈ) "நன்றி, செய்குநர்ப் பிழைத்தோர்க் குய்வில வென்னுங், குன்றா வாய்மை நின்றுநிலை காட்டி’’ கல் 4 : 11 - 13. (உ) "ஒன்றொரு பயன்றனை யுதவி னோர்மனங், கன்றிட வொருவினை கருதிச் செய்வரேற், புன்றொழி லவர்க்குமுன் புரிந்த நன்றியே, கொன்றிடு மல்லது கூற்றும்வேண்டுமோ’’ கந்த. இரணியன் யுத்த. 10. (ஊ) "உதவிகொன் றார்க்கென் றேனு மொழிக்கலாமுபாய முண்டோ’’ கம்ப. கிடகிந்தை. 62. (எ) "எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வதிலை யிருமை யான, செய்ந்நன்றி கொன்ற மகற் கென்றுரைக்கு நூல்’’ சேது. சேதுபலச். 83.

(பிரதிபேதம்)1அழிக்கன்றாயென, 2கற்பித்தார்நெஞ்சு, 3விச்சைகடப்பித்தான், 4உதவியாற் குதவாது மற்றவன், 5அஃகுதெரியாது.