(30). | (1) அருந்தவ மாற்றியார் நுகர்ச்சிபோ லணிகொள விரிந்தானாச் சினைதொறூஉம் வேண்டுந்தா தமர்ந்தாடிப் புரிந்தார்க்கும் வண்டொடு புலம்புதீர்ந் தெவ்வாயு மிருந்தும்பி யிறைகொள வெதிரிய வேனிலான்; | | 5 துயிலின்றி யாநீந்தத் தொழுவையம் புனலாடி மயிலியலார் மருவுண்டு மறந்தமைகு வான்மன்னோ வெயிலொளி யறியாத விரிமலர்த் தண்காவிற் குயிலாலும் பொழுதெனக் கூறுந ருளராயின்; | | 9 பானாள்யாம் படர்கூரப் பணையெழி லணைமென்றோண் மானோக்கி னவரோடு மறந்தமைகு வான்மன்னோ வானாச்சீர்க் கூடலு ளரும்பவிழ் நறுமுல்லைத் தேனார்க்கும் பொழுதெனக் கூறுந ருளராயின்; | | 13 உறலியா மொளிவாட வுயர்ந்தவன் விழவினுள் விறலிழை யவரோடு விளையாடு வான்மன்னோ பெறலரும் பொழுதோடு பிறங்கிணர்த் துருத்திசூழ்ந் தறல்வாரும் வையையென் றறையுந ருளராயின்; எனவாங்கு; | | 18 தணியாநோ யுழந்தானாத் தகையவ டகைபெற வணிகினர் நெடுந்திண்டே ரயர்மதி பணிபுநின் காமர் கழலடி சேரா நாமஞ்சாறெவ்வரி னடுங்கினள் பெரிதே. |
இது பருவவரவின்கண் ஆற்றாத தலைமகள் இறந்தது சிந்தித்து நம் மாட்டு அன்பிலராயினும் இக்காலத்து இவ்வூரின்கட்பண்டுதாம் விளையாடியவாறு நினைந்துவருவர் 1இக்கால வரவு சொல்லுவார் உளராயினெனக் கேட்ட பாணன் பாசறைக்கட் சென்று தலைவனைக் கண்டு கூறியது. இதன் பொருள். (2) அருந்தவ மாற்றியார் நுகர்ச்சிபோ லணிகொள விரிந்தானாச் சினைதொறுஉம் வேண்டுந்தா தமர்ந்தாடிப்
1. இச்செய்யுள் பாலைக்கண் மருதம் நிகழ்ந்ததற்கு மேற்கோள்; தொல். அகத். சூ. 12. நச். 2. (அ) "தவஞ்செய் மார்க்க டம்முடம் பிடாஅ, ததன் பயமெய்திய வளவை மான.................வேண்டுவ முகந்துகொண்டு" பொருந. 91 - 128. (ஆ) "வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ, மீண்டு முயலப் படும்" குறள். 265. (இ) "நோற்றார்க்குச், சோற்றுள்ளும் வீழுங்கறி" (பிரதிபேதம்) 1 இக்காலம் வரவு.
|