பறுப்பனசுற்றி' எனவும் 'உருவமாலைபோல' எனவும் முச்சீரான்வந்த சொற்சீரடி பெற்ற கொச்சகமும், ஓரடியான்வந்த அம்போதரங்கங்களும் 1'பயிலிதழ் மலருண்கண்' எனச் சொற்சீரடிபெற்ற கொச்சகமும் வந்து கலிவெண்பா வுறுப்பின் வேறுபட்டு வந்த கொச்சகக்கலி. ''முச்சீர் முரற்கையு ணிறையவு நிற்கும்'' (1) என்பதனான் முச்சீரடியும் வந்தன. (3) (104). | மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப் புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் | 5 | றொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய நல்லினத் தாய ரொருங்குதொக் கொல்லாரும் வானுற வோங்கிய வயங்கொளிர் பனைக்கொடிப் பானிற வண்ணன்போற் பழிதீர்ந்த வெள்ளையும் பொருமுரண் மேம்பட்ட பொலம்புனை புகழ்நேமித் | 10 | திருமறு மார்பன்போற் றிறல்சான்ற காரியு மிக்கொளிர் தாழ்சடை மேவரும் பிறைநுதன் முக்கண்ணா னுருவேபோன் முரண்மிகு குராலு மா(3)கடல் கலக்குற மாகொன்ற மடங்காப்போர் வேல்வல்லா னிறனேபோல் வெருவந்த சேயு மாங்கப் | 15 | பொருவரும் பண்பி னவ்வையும் பிறவு முருவப்பல் கொண்மூக் குழீ இயவை போலப் புரிபு புரிபு புகுத்தனர் தொழூஉ; | 18 | அவ்வழி, முள்ளெயிற் றேஎ ரிவளைப் பெறுமிதோர் வெள்ளேற் றெருத்தடங்கு வான்; | 20 | ஒள்ளிழை, வாருறு கூந்தற் றுயில்பெறும் வைமருப்பிற் காரி கதனஞ்சான் கொள்பவ னீரரி வெரூஉப்பிணை மானோக்கி னல்லாட் பெறூஉமிக் குரூஉக்கட் கொலையேறு கொள்வான் வரிக்குழை |
1. தொல். செய். சூ. 70. (பிரதிபேதம்) 1 பயிலிதழமருண்கண்.
|