பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்745

வருணன் துணை.

கலித்தொகை
மூலமும்
நச்சினார்க்கினியருரையும்
ஐந்தாவது நெய்தற்கலி.

(118). வெல்புகழ் மன்னவன் விளங்கிய வொழுக்கத்தா
னல்லாற்றி னுயிர்காத்து நடுக்கறத் தான்செய்த
தொல்வினைப் பயன்றுய்ப்பத் துறக்கம்வேட் டெழுந்தாற்போற்
பல்கதிர் ஞாயிறு பகலாற்றி மலைசேர
5 வானாது கலுழ்கொண்ட வுலகத்து மற்றவ
னேனையா னளிப்பான்போ லிகலிருண் மதிசீப்பக்
குடைநிழ லாண்டாற்கு மாளிய வருவாற்கு
மிடைநின்ற காலம்போ லிறுத்தந்த மருண்மாலை;
9 மாலைநீ, தூவறத் துறந்தாரை நினைத்தலிற் கயம்பூத்த
போதுபோற் குவிந்தவென் னெழினல மெள்ளுவா
யாய்சிறை வண்டார்ப்பச் சினைப்பூப்போற் றளைவிட்ட
காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய்;
13 மாலைநீ, தையெனக் கோவலர் தனிக்குழ லிசைகேட்டுப்
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம்பா ராட்டுவாய்
செவ்வழியாழ் நரம்பன்ன கிளவியார் பாராட்டும்
பொய்தீர்ந்த புணர்ச்சியிட் புதுநலங் கடிகல்லாய்;
17 மாலைநீ, தகைமிக்க தாழ்சினைப் பதிசேர்ந்து புள்ளார்ப்பப்
பகைமிக்க நெஞ்சத்தேம் புன்மைபா ராட்டுவாய்