பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்855

(138). எழின்மருப் பெழில்வேழ மிகுதரு கடாத்தாற்
றொழின்மாறித் தலைவைத்த தோட்டிகை நிமிர்ந்தாங்
கறிவுநம் மறிவாய்ந்த வடக்கமு நாணொடு
வறிதாகப் பிறரென்னை நகுபவு நகுபுடன்
மின்னவிர் நுடக்கமுங் கனவும்போன் மெய்காட்டி
யென்னெஞ்ச மென்னோடு நில்லாமை நனிவௌவித்
தன்னலங் கரந்தாளைத் தலைப்படுமா றெவன்கொலோ
மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை
யணிப்பூளை யாவிரை யெருக்கொடு பிணித்தியாத்து
10 மல்லலூர் மறுகின்க ணிவட்பாடு மிஃதொத்த
னெல்லீருங் கேட்டீமி னென்று;
12  படரும் பனையீன்ற மாவுஞ் சுடரிழை
நல்கியா ணல்கி யவை;
14 பொறையென் வரைத்தன்றிப் பூநுத லீத்த
நிறையழி கா மநோய் நீந்தி யறையுற்ற
வுப்பியல் பாவை யுறையுற் றதுபோல
வுக்கு விடுமென் னுயிர்;
18 பூளை பொலமல ராவிரை வேய்வென்ற
தோளா ளெமக்கீத்த பூ;
20 உரிதென் வரைத்தன்றி யொள்ளிழை தந்த
பரிசழி பைதனோய் மூழ்கி யெரிபரந்த
நெய்யுண் மெழுகி னிலையாது பைபயத்
தேயு மளித்தென் னுயிர்;
24 இளையாரு மேதி லவரு முளையயா
னுற்ற துசாவுந் துணை;
26 என்றியான் பாடக் கேட்டு
அன்புறு கிளவியா ளருளிவந் தளித்தலிற்
றுன்பத்திற் றுணையாய மடலினி யிவட்பெற
வின்பத்து ளிடம்படலென் றிரங்கின ளன்புற்
றடங்கருந் தோற்றத் தருந்தவ முயன்றோர்தம்
முடம்பொழித் துயருல கினிதுபெற் றாங்கே.