நகைத்தநகையையும் போக்கி, போன (1) நரணமும் தன் மெய்யிடத்தே வந்து நிற்கையாலே தலை யிறைஞ்சி, தன்மெய்யிடத்தே அழகுண்டாக மனத்திடத்தே நகையுண்டாக அந்நல் லெழின் மார்பனிடத்தே சேர்ந்தாள்; இம்மகிழ்ச்சியையும் எல்லீருங் காண்பீராக வெனக் கண்டார்வியந்துதம்மிற்கொண்டு கூறிற்றாக உரைக்க. எ-று. இது, கண்டார்க்கு 1அவராக்கங் கண்டு மருட்கை பிறந்தது. ‘கொலைவனைக் காணேன்கொல் யான்’ என்னுந்துணையும் கூறத் தகாதன கூறலின் மடனிறந்தவாறும் ‘செறாஅ துளனாயிற் கொள்வேன்’ என்ற தனால், தன் வருத்தந் தோன்றாமற் கூறலின் வருத்தமிறந்தவாறும் ‘காமன்கணை யிரப்பேன்’ 2என்றதனால் அவனை வருத்துவேன் என்று 3அவனைவிய வாமையின் மருட்கையிறந்தவாறும் ‘கலைஇய...............புருவம்’ 4என்று உறுப்பான் வனப்பு மிகுதி கூறலின் மிகுதியிறந்தவாறுங் காண்க. இஃது ஐஞ்சீரடி வந்த தரவும் நெடுவெண்பாட்டும் ஐஞ்சீரான் வந்த ஓரடியானொன்றும் நெடுவெண்பாட்டும் இருசீரானொன்றும் குறுவெண்பாட்டும் 5நெடுவெண்பாட்டும் இரண்டு குறுவெண்பாட்டும் நெடுவெண்பாட்டும் குறு வெண்பாட்டும் மூன்று நெடுவெண்பாட்டும் தனிச்சொல்லும் வஞ்சியடியி ரண்டு முன்னர்விரவி யாப்பின் வேறுபட்ட கொச்சகவெண்பாவும் பெற்ற கொச்சகக்கலி. (30) (148). | தொல்லியன் ஞாலத்துத் தொழிலாற்றி ஞாயிறு வல்லவன் கூறிய வினைதலை வைத்தான்போற் கல்லடைபு கதிரூன்றிக் கண்பயங் கெடப்பெயர வல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல மல்லனீர்த் திரையூர்பு மாலிருண் மதிசீப்ப வில்லவ ரொழுக்கம்போ லிருங்கழி மலர் கூம்பச் செல்லுமென் னுயிர்ப்புறத் திறுத்தந்த மருண்மாலை; | 8 | மாலை நீ; இன்புற்றார்க் கிறைச்சியா யியைவதே செய்தாய்ம னன்புற்றா ரழநீத்த வல்லலுட் கலங்கிய துன்புற்றார்த் துயர்செய்த றக்கதோ நினக்கு; |
1. (அ) "வதுவை யயர்தல் வேண்டுவல்.............இவள், வதுவைநா ணொடுக் கமுங் காண்குவல் யானே’’ (கலி. 52: 23- 25) என்பதும் (ஆ) அதன் குறிப்பும் (இ) "வதுவைநாட் கலிங்கத்து ளொடுங்கிய.............மடந்தை’’ (கலி. 69: 3 - 4) என்பதும் (ஈ) அதன் குறிப்பும் (உ) இந்நூற்பக்கம் 897 : 3-ஆம் குறிப்பும் இங்கே அறிதற்பாலன. (பிரதிபேதம்)1அவர்களாக்கம், 2என்றதனை. என்றானவனை, 3அதனைவிய, 4என்னுமுறுப்பாக, 5நெடுவெண்பாட்டுமிரண்டும் இரண்டுகுறு.
|