பக்கம் எண் :

573

புரந்தோனெந்தை யாமலநதொலை.....
அன்னோனை யுடையேமென்ப ......வறட்
20கியாண்டு நிற்க வெள்ளி மாண்ட
உண்ட நன்கலம் நெய்து நுடக்கவும்
தின்ற நண்ப லூண்டவும்
வந்த வைக லல்லது
சென்ற வெல்லைச் செலவறி யேனே.

(பி - ம்.) 'டுறவங்குநாரை' 3 'வாடைக்கரும்பின' , 'அடைக்கரும்பின' 4 'வனபாலாற்குக் கருங்' 8 'றாயுனுழவா' 10 'கிணையேம்' 11 'நெல்லென்னாம் பொன்னென்னாம்' 12'கன்னற்கொண்ட' 14 'யான்னண்டவுமதூண்டா' 18 'புநதெனந்தை' 22 'நன்பலூண்டோண்டவும்'

நிணையும் துறையும் அவை

கரும்பனூர்கிழானைப் புறத்திணை நன்னாகனார்.

(கு - ரை.) 1.மென்பால் - மருத நிலம்.

2.வஞ்சிக்கோடு - ஒஞிசமரத்தின் கிளை.

4. வன்பால் - முல்லை நிலம் .

7. இருப்பைப்பூ உறைக்குந்து - இருப்பைப்பூ உதிரும்;" முள்ளரை யிலவத் தொள்ளிணர் வான்பூ... இரு நிலத் துறைக்கும் " (ஐங்குறு.320) .

8.மண்டை - ஒருவகை உண்கலம் (வாணாய்) .

9. கெடிற்றுமிசை - கெடிற்று மீனாகிய உணவு ; "அரிப்பறை வினைஞரல்குமிசைக் கூட்டும்" (ஐங்குறு.81) ; மிசை , மிசையெனவும் வழங்கும் ; "குறவர்க் கல்குமிசை வாகும்"(புறநா.236:2) .

11. நெல்லும் பொன்னும் : “நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க” (ஐங்குறு. 1) ; “பொன்னு நெல்லும் புரிவின் வழங்குகென்று” (பெருங்.1. 37 : 196) 12. கனற்ற - வெதுப்ப.

14. யான் தண்டவும் - யான் நீங்கவும் ; “தண்டாக் களிப்ப னாடுங்கூத்து” (மணி.6 : 126)

17. “நீர்நாண நெய்வழங்கியும்” (புறநா. 166 : 21)

19. என்ப : அசை. வறட்கு - வற்கடகாலத்தைத் தரும்பொருட்டு.

20. வெள்ளி யாண்டு நிற்க - மழைக்கோளாகிய சுக்கிரன் எங்கே நின்றாலென் ? புறநா. 383 : 24, 386 : 20 - 24.

22. நண்பல் - பல்லின்நடு.

(384)