பக்கம் எண் :

16

    

ஊரினர்: இவ்வூர் தொண்டை நாட்டிலுள்ள தென்றும், இப்போது இதற்கு
இராமகிரியென்று பெயர் வழங்குகிற தென்றும் கூறுப.

     இப் பாட்டின்கண்,  ஆசிரியர் காரிகிழார் பாண்டியனை நோக்கி,
“வேந்தே, நினக்கு எல்லா வுலகினும் உருவும் புகழும் உண்டாகுக; நின்
கோல்  ஒருதிறம்  பற்றாது  நடுநிலை  நிற்க; நின் படைகுடி முதலியன
சிறக்க;    பகைப்புலத்து    வென்ற   நன்கலங்களைப்   பரிசிலர்க்கு
வழங்கியுயர்வதோடு முக்கட்செல்வம் நகர்வலம் செய்தற்கண் நின் குடை
பணிக;  நான்மறை  முனிவர்  கைகவித்து வாழ்த்துங்கால் நின் சென்னி
தாழ்க;  பகைப்புலத்துச்  சுடுபுகையால்  நின்  கண்ணி  வாடுக; மகளிர்
கூட்டத்திற்  சினமின்றி  மெல்லியனாகுக;  மதியமும்  ஞாயிறும் போல
இந் நிலமிசை மன்னுவாயாக” எனச் சொல்லி வாழ்த்துகின்றார்.

 வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின்குடக்கும்
5. கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டின்
  நீர்நிலை நிவப்பின் கீழும் மேல
தானிலை யுலகத் தானு மானா
துருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோன் ஞமன்ன் போல வொருதிறம்
10.பற்ற லிலியரோ நிற்றிறஞ் சிறக்க
  செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி யடர்ப்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதி னேவிப்
பாசவற் படப்பை யாரெயில் பலதந்
15.தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம்
 பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வம் நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
20.நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே
  வாடுக விறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே
செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை
மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே
25.ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத்தடக்கிய