| தண்டா வீகைத் தகைமாண் குடுமி தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும் மன்னிய பெருமநீ நிலமிசை யானே. (6) | திணையும் துறையு மவை; துறை - வாழ்த்தியலுமாம். பாண்டியன பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் பாடியது.
உரை : வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் - வடக்கின் கண்ணது பனிதங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்; தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் - தெற்கின் கண்ணது உட்குந் திறம்பொருந்திய கன்னியாற்றின் தெற்கும்; குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும் -கீழ்க்கண்ணது கரையைப் பொருகின்ற சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும்; குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் - மேல்கண்ணது பழையதாய் முதிர்ந்த கடலின் மேற்கும்; கீழது - கீழதாகிய; முப்புணர் அடுக்கிய முறை முதற் கட்டின் -நிலமும் ஆகாயமும் சுவர்க்கமுமென மூன்றுங் கூடிய புணர்ச்சியாக அடுக்கப்பட்ட அடைவின்கண் முதற்கட்டாகிய; நீர்நிலை நிவப்பின் கீழும் - நீர்நிலைக்கண் ஓங்கிய நிலத்தின் கீழும்; மேலது ஆன்நிலை உலகத்தானும் - மேலதாகிய கோ லோகத்தின்கண்ணும்; ஆனாது - அமையாது; உருவும் புகழும்ஆகி - உட்கும் புகழுமாக; விரிசீர்த் தெரிகோல் ஞமன்ன் போல - பரந்த அளவையுடைய பொருள்களை ஆராயும் துலாக்கோலின்கட் சமன்வாய் போல; ஒரு திறம் பற்றல் இலியர் - ஒருபக்கம் கோடாதொழிக; நின் திறம் சிறக்க - நினது படை குடி முதலாகிய கூறுபாடுகள் சிறக்க; செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்து - போர் செய்தற்கு மாறுபட்ட பகைவர் தேயத்தின் கண்ணே; கடற்படை குளிப்ப மண்டி - நினது கடல்போலும் படை மேல் விழுந்து உள்புக மிக்குச் சென்று; அடர்ப்புகர்ச் சிறுகண் யானை செவ்விதின் ஏவி - அடர்ந்த புகரினையுடைய சிறுகண் யானையைத் தடையின்றி நேரே யேவி; பாசவல் படப்பை ஆரெயில் பல தந்து - பசிய விளைநிலப் பக்கத்தையுடைய அரிய மதிலரண் பலவற்றையுங் கொண்டு; அவ் வெயில் கொண்ட செய்வுறு நன்கலம் - அவ்வரணின்கட் கொள்ளப்பட்ட அழகுபடச் செய்த நல்ல அணிகலங்களை; பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி - பரிசிலர்க்கு வரிசையின் வழங்கி; நின் குடை - நினது கொற்றக்குடை; முனிவர் முக்கட் செல்வம் நகர் வலம் செயற்கு - முனிவராற் பரவப்படும் மூன்று திருநயனத்தையுடைய செல்வரது கோயிலை வலம் வருவதற்கு; பணியியர் - தாழ்க; பெரும-; நின் சென்னி - நினது முடி; சிறந்த நான்மறை முனிவர் ஏந்து கை யெதிரே - மிக்க நான்கு வேதத்தினையுடைய அந்தணர் நின்னை நீடு வாழ்கவென் றெடுத்தகையின் முன்னே; இறைஞ்சுக -வணங்குக; இறைவ-; நின் கண்ணி - நினது
|