பக்கம் எண் :

18

    

     கண்ணி; ஒன்னார் நாடு சுடு கமழ்புகை எறித்தலான் வாடுக -நின்
பகைவரது  நாட்டைச் சுடும்   பல  மணநாறும் புகையுறைத்தலான்
வாடுக;  நின் வெகுளி -  நினது சினம்; வாலிழை மங்கையர் துனித்த
வாண்முகத் தெதிரே செலியர் - வெளிய  முத்தாரத்தையுடைய  நின் 
தேவியருடைய துனித்த ஒளியையுடைய முகத்தின் முன்னர்த் தணிக;
வென்று வென்றி யெல்லாம்  அகத்தடங்கிய -  வென்று  வென்றி
முழுதையும் வியவாது  நின்மனத்தே  உட்கொண்ட;  தண்டா  ஈகை
தகை மாண்   குடுமி -   தணியாத   வண்மையையுடைய    தகுதி
மாட்சிமைப்பட்ட  குடுமி;  தண்  கதிர்  மதியம் போலவும் -குளிர்ந்த
சுடரையுடைய திங்களை யொப்பவும்; தெறு சுடர்ஒண் கதிர்  ஞாயிறு
போலவும் - சுடுகின்ற ஒளிபொருந்திய ஒள்ளிய  கதிரையுடைய
ஞாயிற்றை  யொப்பவும்;  பெரும-;  மன்னிய - நிலை பெறுவாயாக;
நீ நிலமிசையானே - நீ உலகத்தின்மேல் எ-று.

     வடாஅ தென்னும்  முற்றுவினைக்குறிப்பைப்  பெயர்ப்படுத்தி, பனி படு
நெடுவரையொடு பண்பொட்டாக்கி, அதன் வடக்கு மென்க. ஒழிந்தனவும்
அன்ன. “மேலது” துறக்கத்தின் மேலுமென்பார்,  அதற்கு  மேலதாகிய
“ஆனிலை  யுலகத்தானு”  மென்றார். உரு வென்பது இவனாணையாற் பிற
ரஞ்சும் உட்குடைமை.  அத்தையும் ஆங்கவும் அசைநிலை.

     குடுமி, பெரும, உருவும் புகழும் ஆக; ஒருதிறம் பற்றா தொழிக;நிற்றிறம்
சிறக்க;  பணிக;  இறைஞ்சுக;  வாடுக;  செல்லுக;  பரிசின் மாக்கட்கு  நல்கி,
மதியம் போலவும், ஞாயிறு போலவும், பெரும, நீ நிலத்தின்   மிசை மன்னுக
வெனக்கூட்டி   வினைமுடிவு  செய்க.

    தேஎத்தென்பதனுள், அத்தை அசைநிலையாக்கித் தேயம்கடற்படைக்குள்ளே
குளிப்ப வென்றுரைப்பாருமுளர். ஞமன், யமனெனினுமமையும் அடற்புகர்ச்
சிறுகண் யானை யென்று பாடமோதி, கொலையைச் செய்யும் புகரையுடைய
யானை யெனினு மமையும். ஆகி, ஆகவெனத் திரிக்க; ஆகி  யென்பதனைத்
திரியாது நிற்றிறஞ் சிறக்க வென்பதனோ டியைத் துரைப்பாரு முளர். நின்றிறம்,
நிற்றிறம் என வலிந்து நின்றது.

     நகர்வலஞ்  செயற்குப்  பணியியரென  வீடும், ஏந்துகை யெதிர்
இறைஞ்சுக   வென  அறமும், புகையெறித்தலான்   வாடுகவெனப்பொருளும், 
முகத்தெதிர்  தணிகவென இன்பமும்  கூறியவாறாயிற்று.  இஃது  இவ்வாறு
செய்கவென அரசியல்  கூறலிற்  செவியறிவுறூஉம், மதியமும்   ஞாயிறும்
போல  மன்னுக  வென்றமையான்  வாழ்த்தியலுமாயிற்று.


     விளக்கம்:வடக்கின் கண்ணது வடாஅது,தெற்கின் கண்ணது தெனாஅது,
குணக்கின் கண்ணது குணா அது,  குடக்கின்  கண்ணது   குடாஅது என
வந்தன.“கண்ணென்  வேற்றுமை    நிலத்தினானும்”  (தொல். சொல்.213)
என்பதனால், இவை யாவும், ஏழாம்  வேற்றுமைப் பொருண்மைக் கண்வந்த
வினைக்குறிப்புமுற்று.  இவை  பெயராய், வடக்கின்கண்ணதாகிய