பக்கம் எண் :

174

ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
புனிறுதீர் குழவிக் கிலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொன் மலிநீர்
10.மன்பதை புரக்கு நன்னாட்டுப் பொருநன்
உட்பகை யொருதிறம் பட்டெனப் புட்பகைக்
கேவா னாகலிற் சாவேம் யாமென
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
தணிபறை யறையு மணிகொ டேர்வழிக்
15.கடுங்கட் பருகுநர் நடுங்குகை யுகுத்த
நறுஞ்சே றாடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பிற் படுமுழா வோர்க்கும்
உறந்தை யோனே குருசில்
பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே. (68)

       திணை: அது. துறை: பாணாற்றுப்படை. சோழன் நலங்கிள்ளியைக்
கோவூர்கிழார் பாடியது.

    உரை: உடும்பு உரித்தன்ன என்பெழு மருங்கிற் கடும்பின் -
உடும்புரித்தாற்போன்ற எலும்பெழுந்த விலாப்புடையை யுடைய சுற்றத்து;
கடும் பசி களையுநர்க் காணாது - மிக்க பசியைத் தீரப்பாரைக்
காணாதே; சில் செவித்தாகிய கேள்வி நொந்து நொந்து - கேட்டார்
பலரும் அறிதற் கரிதாய் அறிவார் சிலராதலின் சில்
செவிக்கண்ணதாகிய யாழை இப்பாண் சாதியது உணவிற்கு
முதலாகப்பெற்ற பரிசு என்னென்று வெறுத்து; ஈண்டு எவன் செய்தியோ
- பாண இங்கே என் செய்கின்றாயோ பாண; பூண் சுமந்து - பூணைத்
தாங்கி; அம் பகட்டு எழிலிய செம்பொறி ஆகத்து -
அழகிய பெருமையையுடைய எழில் பெற்ற செம்பொறி பொருந்திய
மார்பினையுடைய; மென்மையின் மகளிர்க்கு வணங்கி -மென்மையான
மகளிர்க்குத் தாழ்ந்து; வன்மையின் ஆடவர்ப் பிணிக்கும் -
வன்மையான் வீரரை யகப்படுக்கும்; பீடு கெழு நெடுந்தகை - பெருமை
பொருந்திய நெடுந்தகை; புனிறு தீர் குழவிக் கிலிற்று முலை போல -
ஈன்றணிமை பொருந்தி அது தீர்ந்த குழவிக்குச் சுரக்கும் முலைபோல;
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர் - நீர் மிக்க காவிரியினது கரை
மரத்தைச் சாய்க்கும் மிக்க வெள்ளம்; மன்பதை புரக்கும் நன்னாட்டுப்
பொருநன் - உலகத்து உயிர்ப்பன்மையைப் பாதுகாக்கும் நல்ல
சோழநாட்டையுடைய வேந்தன்; உட்பகை ஒரு திறம் பட்டென -
உட்பகை யொரு கூற்றிலே பட்டதென்னும்படி; புட்பகைக்கு
ஏவானாகலின் - எம்மைப் புட்செய்யும் பகையிடத்து