பக்கம் எண் :

175

ஏவானாகலான்; சாவேம் யாமென - யாம் எம்மிற் பொருது
மடியக்கடவேமென்று; நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப - நீங்காத
மறத்தையுடையோர் தம்முடைய பூரித்த தோள்களைத் தட்ட; தனி
பறையறையும் அணி கொள் தேர் வழி - அவருடைய மேற்கொள்
தணிதற்குக் காரணமாகிய பறை யறையும் அழகு பொருந்திய தேர்
வழிக்கண்; கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த - வெய்ய
கள்ளைப் பருகுவார் தம் நடுங்கு கையான் உகுக்கப்பட்ட; நறுஞ்
சேறாடிய வறுந்தலை யானை - நறிய அச்சேற்றின்கண் ஆடிய பாக
ரேறாத யானை; நெடு நகர் வரைப்பிற் படுமுழா ஓர்க்கும் - நெடிய
நகரிடத் தொலிக்கும் பறையினது ஓசையைச் செவி தாழ்த்துக் கேட்கும்;
உறந்தையோன் - உறையூரிடத்தான்; குருசில் - அவ்விறைவன்; பிறன்
கடை மறப்ப நல்குவன் செலின் - நீ பிறன் வாயிலை நினையாமை
நினக்கு அளிப்பன் அவன்பாற் செல்வையாயின் எ-று.

     செம்பொறி யென்றது, “வரையகன் மார்பிடை வரையு மூன்றுள” (சீவக.
1426) என்றும் இலக்கணத்தை; திருமக ளெனினு மமையும். உறந்தையோ
னென்றது வினைக்குறிப்பு முற்று. பூண் சுமந் தெழிலிய அம் பகட் டாகத்து
நெடுந்தகை யென இயையும். பாண, நீ, செலின், நெடுந்தகை பொருநன்
குருசில், உறந்தையோன், அவன் பிறன் கடை மறப்ப நல்குவன்; நீ ஈங்கு
எவன் செய்தியோ வெனக் கூட்டுக. “உட்பகை யொருதிறம் பட்டென”
என்பதற்கு உள்ள பகை சந்தாகிய ஒரு கூற்றிலே பட்டதாக என்றுரைப்பினு
மமையும் பகட்டினுடைய தோற்றம் பொலிவு பெற வென்பாரு முளர். புட்பகை
யேவானாகலின் என்றோதி உள்ள பகை தம்மிற் கூடிற்றாக, புள்
நிமித்தத்திற்குப் பகைவன் ஏவானாகலின், சாவேம் யாமென மறவர் தோள்
புடைப்ப வென்றுரைப்பாரு முளர். புட்பகை யென்று இவனுக் கொரு பெயர்.

     விளக்கம்: சில் செவித்தாகிய கேள்வி யென்ற விடத்துக் கேள்வி யாழ்
என்றும், அவ் யாழிசையின் நலத்தைக் கேட்டறிவோர் சிலராதலின், “சில்
செவித்தாகிய கேள்வி” யென்றும் கூறினார். நொந்து நொந்து என அடுக்கியது.
வறுமை மிகுதியாற் பிறந்த வருத்த மிகுதி தோற்றுவித்து நிற்றலின், அதனை,
“இப் பாண் சாதியது உணவிற்கு முதலாகப் பெற்ற பரிசு என்னென்று
வெறுத்து” என விளக்கினார். பகடு - பெருமை; இது யானைக்கும்
உரியதாகலின், அதுபற்றி, அம்பகட்டெழிலிய வென்றதற்குப் பகட்டினுடைய
தோற்றம் பொலிவு பெற வென்பாரு முளர். என்றார். இலிற்றுதல் - சுரத்தல்.
மன்பதை - உயிர்த் தொகுதி. படை கொண்டு செல்லும் தலைவன், தன்
படையில் ஒரு பகுதிக்கண் உட்பகை தோன்றிற்றெனின், அதுகுறித்துச் செய்வன
செய்தற்கு மேற்செலவை நிறுத்திவிடுவேன்; அது போல வேந்தன் புட்பகைக்
கேவானாதல் கண்டு, “புட்பகை யொருதிறம் பட்டென” என்றார். புட்பகை.
காரி, செம்போத்து முதலிய பறவைகள் குறுக்கிட் டோடித் தீநிமித்தம் செய்தல்.
குறையத் தாராது மிக நிறையத் தருவன் என்பதுபட “பிறன்கடை மறப்ப”
என்றார்.