பக்கம் எண் :

267

 
   ஒருநீ யாயினை பெரும பெருமழைக்
   கிருக்கை சான்ற வுயர்மலைத்
20 திருத்தகு சேஎய்நிற் பெற்றிசி னோர்க்கே.   (125)

     திணை: வாகை. துறை: அரசவாகை. சேரமான் மாந்தரஞ்சேர
லிரும்பொறையும் சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும்
பொருதவழிச் சோழற்குத் துப்பாகிய தேர்வண் மலையனை வடம
வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.

    உரை : பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன - பருத்தி நூற்கும்
பெண்டாட்டியது சுகிர்ந்த பஞ்சுபோன்ற; நெருப்புச் சினம் தணிந்த -
நெருப்புத் தன் வெம்மை ஆறுதற்கேதுவாகிய; நிணந் தயங்கு
கொழுங்குறை - நிணமசைந்த கொழுவிய தடிகளை; பரூஉக்கண்
மண்டையொடு - பெரிய உடலிடத்தையுடைய கள் வார்த்த
மண்டையொடு; ஊழ் மாறு பெயர - முறை முறையாக
ஒன்றற்கொன்று மாறுபட; உண்கும் - உண்பேமாக; எந்தை -
எம்முடைய தலைவ; நின்காண்கு வந்திசின் - நின்னைக் காண்பேன்
வந்தேன்; நள்ளாதார் மிடல் சாய்த்த வல்லாள - பகைவரது
வலியைத் தொலைத்த வலிய ஆண்மையுடையோய்; நின் மகிழ்
இருக்கை - நினது மகிழ்ச்சியையுடைய இருக்கைகண்; உழுத நோன்
பகடு அழி தின் றாங்கு - உழுத வலிய பகடு பின் வைக்கோலைத்
தின்றாற்போல; நீ நயந்துண்ணும் நறவு - நினது தாளாற்றலாற் செய்த
பொருளை யாவர்க்கும் அளித்துப் பின் நீ விரும்பி யுண்ணும் கள்;
நல் அமிழ்தாக - நல்ல அமிழ்தாக; குன்றத் தன்ன களிறு பெயர -
மலைபோலும் யானை பட; கடந் தட்டு வென்றோனும் - எதிர்நின்று
கொன்று வென்றவனும்; வெலீஇயோன் இவனென நிற்கூறும் - நம்மை
வெல்வித்தோன் இவனென நின்னையே மகிழ்ந்து சொல்லும்;
கழலணிப் பொலிந்த சேவடி - வீரக் கழலாகிய அணியாற் சிறந்த
செய்ய அடியாலே; நிலம் கவர்பு - போர்க்களத்தைக்
கைக்கொள்ளவேண்டி; விரைந்து வந்து சமம் தாங்கிய - விரைந்து
வந்து போரைத் தடுத்த; வல்வேல் மலையன் அல்ல னாயின் -
வலிய வேலினையுடைய மலைய னல்லனாயின்; நல்லமர் கடத்தல்
நமக்கு எளிதுமன் என - நல்ல போரை வெல்லுதல் நமக்கு
எளிதென; தோற்றோன் தானும் தொலைஇயோன் இவனென
நிற்கூறும் - தோற்றவனும் நம்மைத் தொலைவித்தோன் இவனென
நின்னையே புகழ்ந்து சொல்லும்; ஒரு நீ ஆயினை - ஆதலால் நீ
ஒருவனாயினாய்;பெரும-; பெருமழைக்கு இருக்கை சான்ற - பெரிய
மழைக்கு இருப்பிடமாதற் கமைந்த; உயர் மலை - உயர்ந்த
மலையையுடைய; திருத்தகு சேஎய் - திருத்தக்க சேயை யொப்பாய்;
நிற் பெற்றிசினோர்க்கு - நின்னை நட்பாகவும் பகையாகவும்
பெற்றோர்க்கு எ-று.